chennireporters.com

ஆனந்த மழையில் நனைந்த அண்ணிதான பிரபு.

பஹரின் நாட்டை சேர்ந்த கலீல் அபு அகமது என்பவர் தன் வாழ்நாளில் நூற்றுக்கணக்கான அனாதைளுக்கு அடைக்கலமும் ஆதரவும் அளித்து வந்துள்ளார்.

இதனை கேள்விபட்டஅந்த நாட்டின் மன்னர் அவரின் மனிதநேயத்தை பாராட்டி YOU ARE A CHAMPION என்ற பட்டத்தையும் விருதையும் புதுமையான முறையில் கொடுக்க நினைத்தார்.

அவருடைய கார் போக்குவரத்து சமிக்கையில் நிற்கும் போது ஆச்சரியப்படும் வகையில் அவருடைய புகைபடத்தை தாங்கிய பதாகைகள் அனைத்து திசைகளிலும் விளம்பரமாக வரும்படி அமைக்கபட்டது.

அந்த பதாகையில் உங்களை போன்ற முதன்மையிலும் முதன்மையானவர் இதுவரை பிறந்ததில்லை என்ற வாசகம் எழுதபட்டிருந்தது.

சரியாக அந்த தருணத்தில் வானொலியும் அவருக்கு வாழ்த்து சொல்லும்படி ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

அவருடைய ஊழியர்களின் துணைக் கொண்டு யாருக்கும் தெரியமால் காரில் ரகசிய கேமரா பொருத்தபட்டு அவருடைய அந்த உணர்வு பூரணமான தருணங்கள் படமாக்கபட்டன.

மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் வளர்த்துக்கொண்டால் இறைவனுடைய பார்வை உங்கள் மீது இருக்கும் இந்த உலகத்தில் அன்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை அதிகாரத்தால் பணபலத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டவனே மனிதன்

இதையும் படிங்க.!