chennireporters.com

*பிரஷர் குக்கர் விசில் சத்தம் பறக்குது. சூரியன் சோடம் போச்சு. இலை வாடிபோச்சு*

திருவள்ளூர் நகராட்சிக்கு இன்னும் இரண்டு தினங்களில் நகர்மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள்உள்ளது.

அதில்16-வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நளினி ராஜன் என்பவர் பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக சார்பில் 16-வது வார்டில் எந்தவித மக்கள் நலப் பணிகளையும் அதிமுக செய்து தரவில்லை.

அது தவிர கடந்த ஆட்சி காலத்திலும் திருவள்ளூர் எம்.எல்.ஏவாக இருந்த V.G ராஜேந்திரன் இந்த பகுதிக்கு எந்த விதமான பொதுமக்கள் நலன் காக்கும் எந்த பணிகளையும் செய்து தரவில்லை.அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர்,16-வது வார்டில் நிற்கும் நளினியின் கணவர் ராஜன் வழக்கறிஞராக இருப்பதினால் பொதுமக்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் சட்டபூர்வமாக பெற்றுத் தரப்படும் என்று பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

குறிப்பாக இலவச வீட்டு மனை பட்டா, காந்திபுரம் பகுதியில் கடந்த பத்து வருடங்களாக போடாத சாலை, பாதாள சாக்கடைகள், காந்திபுரம் பகுதியிலுள்ள விநாயகர் கோயில் புதுப்பிப்பது, அங்கன்வாடி மையம் அமைப்பது, அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள தெருவோரக் கடைகள், சிறு வியாபாரிகள் ஆகியோருக்கு வங்கிக்கடன் பெற்று தருவேன்.

போஸ்ட் ஆபீஸ் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஈமச்சடங்கு காரிய செய்ய மேடை அமைத்து தருவேன்.

போஸ்ட் ஆபீஸ் பகுதியில் வசிக்கும் மக்களின் வாக்குகளை பொது வார்டுக்கு மாற்ற முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் வங்கிக் கடன்களை பெற்று தந்து அவர்களுக்கு சுயதொழில் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

பட்டா உள்ள மனைகளுக்கு வீடு கட்ட முறையான வழிகாட்டுதல் மூலம் இடைத் தரகர் கமிஷன் இல்லாமல் கடன் பெற்று தரப்படும்.

அ.ம.மு.க.வேட்பாளர்நளினி ராஜன்

ஏழை பொது மக்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திலும் தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தில் வீடு கட்டித் தரவும் முயற்சிக்கப்படும்.புங்கத்தூரில் உள்ள அரசு பள்ளியை தரம் உயர்த்தபடும்.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் சரி செய்வேன்.கடந்த 20 வருடங்களாக மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதை சரி செய்து தருவேன்.

ஐ.ஆர்.என் திருமணமணடபத்தின் பின்புறம் உள்ள ஆற்று கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்ற முயற்சி எடுப்பேன்.16-ஆவது வார்டுக்கு இங்கு தனியாக ஒரு ரேஷன் கடை அமைத்து தரப்படும்.

அதன் பின்புறம் உள்ள பகுதிகளை ரிசர்வு வார்டில் இருந்து நீக்கி பொது வார்டுக்கு மாற்ற சட்ட ரீதியாக பாடுபடுவேன்.இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகளுக்கு விளையாட்டுத் திடல் அமைத்து தருவேன்.

சிலம்பம், கராத்தே, தேக்வாண்டோ போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுத் தர தனது சொந்தப் பணத்தில் பயிற்சியாளரை நியமித்து பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்க பாடுபடுவேன்.சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலையைக் கடக்கும் பொழுது மிகவும் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.அதனால் வேகத்தடை அமைத்து டிராபிக் சிக்னல் அமைக்க பாடுபடுவேன்.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் 272 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலைக்கு வந்த நான் இந்த முறை வெற்றி வேட்பாளராக களம் காண்கிறேன்.

உங்கள் வாக்குகளை குக்கர் சின்னத்தில் முத்திரையிட்டு பொதுமக்களுக்கு,
அர்ப்பணிப்பு தன்மையோடு பணியாற்ற குக்கர் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதையும் படிங்க.!