chennireporters.com

மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி பேச்சு.

கடந்த ஆறு ஆண்டுகளாக ஜூன் மாதம் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உலகம் முழுவதும் இன்று 7வது சர்வதேச யோகா தினம் கடை
பிடிக்கபடுகிறது  இந்த ஆண்டில் யோகா தினத்தின் முக்கிய பொருளாக ஆரோக்கியத்திற்கான யோகா இந்தியா முழுவதும் பல்வேறு யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக யோகா தினம் பெருமளவில் நடைபெறவில்லை தலைநகர் டெல்லியில் நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் இன்று காலை ஆறு முப்பது மணிக்கு தொடங்கியது.

அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி யோகா தின சிறப்புரை ஆற்றினார் பிரதமர் மோடி ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன் .

கொரோனா பெரும் தொற்றுகாலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது.யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை என்றவர் நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்ற அய்யன் திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

தொடர்ந்து உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்தியா மற்றொரு முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளது இப்போது “யோகா எம்” என்ற யோகா செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இது உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு வெவ்வேறு மொழிகளிலும் யோகா பயிற்சி வீடியோக்களை கொண்டிருக்கும்.

இது நமது ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம் என்ற குறிக்கோளில் நமக்கு உதவும்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யோகாவை கவசமாக பயன்படுத்தினர்.

மருத்துவர்கள் செவிலியர்கள் யோகா கற்பிக்கும் மருத்துவமனைகளின் படங்கள் உள்ளன.

பல சுவாச பயிற்சிகளை செய்கிறார்கள் இந்த பயிற்சிகள் சுவாச அமைப்பை வளப்படுத்துகின்றன என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று மருத்துவ விஞ்ஞானம் கூட மருத்துவ சிகிச்சையை தவிர்த்து நோயை குணப்படுத்தும் செயல் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நோயை குணப்படுத்தும் செயல்முறைக்கு யோகா உதவுகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் யோகா தினத்தையொட்டி மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வீட்டிலேயே யோகாசனங்கள் செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க.!