chennireporters.com

#Protection of women guards; பெண் காவர்களின் பாதுகாப்பு முக்கியம். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் புதிய உத்தரவு.

தமிழ்நாட்டில் சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெண் காவலர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும் அவர்களை தேவையில்லாத பணிகளில் பயன்படுத்தக் கூடாது என்று தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் டேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பெண் காவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

ஏடிஜிபி டேவிட்சன் டேவாசீர்வாதம்.
அண்ணா பல்கலைகழகத்திக்குள் மாணவி பாலியல் வன்கொடுமை, அரசு பள்ளி மாணவி 3 ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை, ரயில் பயணத்தின் போது பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு என பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த கொடுமைகள் காவல்துறைக்கும், அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு  அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கையை  அனுப்பியுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு முக்கியம்! Female police officers in camp offices

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதியிட்ட அந்த சுற்றறிக்கையில்,

“காவல்துறை உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களில் கணினி தொடர்பான வேலைகள், கைபேசிகளை கையாள்வது (காத்திருப்பு பணிகள்) போன்ற பணிகளுக்காக ஏராளமான பெண் காவலர்களை பணியமர்த்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. Female police officers in camp offices

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகிறது அதிகரித்து வருவதால், பெண் காவலர்களைப் காவல் நிலையப் பணிகளில் சிறந்த முறையில் பயன்படுத்துவது அவசியமாக கருதப்படுகிறது.

பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறை மற்றும் பிற பாலின அடிப்படையிலான குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை கையாள்வதில் பெண் காவலர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.All women station, an outdated concept' - The Hindu

பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் புகாரளிக்கும் போது அவர்கள் பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள் என்பதை உணரச் செய்வதற்கும், ஆதரிப்பதற்கும், புகார்கள் குறித்து கேட்பதற்கும் காவல் நிலையங்களில் பெண் காவலர்கள் இருப்பது அவசியமாகும்.

பெண் போலீசார் காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியமர்த்த வேண்டும்.

 Female police officers in camp offices

எனவே, நிர்வாகப் பணிகளுக்காக முகாம் அலுவலகங்களில் பெண் காவலர்களை தேவையில்லாமல் பணியமர்த்தாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

காவல்துறையில் அனைத்து பிரிவுத் தலைவர்களும் ஏற்கனவே உள்ள பணியமர்த்தல்களை மதிப்பாய்வு செய்து தேவையான மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவா ஆசீர்வாதம் அவர்களின் உத்தரவால் தமிழகத்தில் உள்ள பெண் காவலர்கள் குறிப்பாக ஆயுதப்படையை மற்றும் காவல் நிலையங்கள் முகாம் அலுவலகங்களில் பணியாற்றும் பெண் காவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெண் காவலர்களின் நிலையை அறிந்து கடவுளைப் போல இந்த உத்தரவை ஏடிஜிபி போட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் பெண் காவலர்கள்.தங்களுக்கு ஏற்படும் சொல்ல முடியாத பல இன்னல்களால் பாதிக்கப்பட்டிருந்த எங்களுக்கு இந்த உத்தரவு பெரும் விடுதலை அளிக்கிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் பெண் காவலர்கள்.

தமிழக காவல்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய உத்தரவு என்று பெரிதும் பாராட்டி வருகின்றனர் பெண் உயர் போலீஸ் அதிகாரிகள்.

இதையும் படிங்க.!