chennireporters.com

“புனீத் “மக்கள் மனதில் நீங்கா மனித புனிதன்.

தன் வாழ்நாளின் பாதி நாட்களையும் தன் வருமானத்தை 75% மக்களுக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார் புனித் ராஜ்குமார்.

தன் நடிப்பின் மூலம் சம்பாதித்த வருவாயில் 48 இலவச பள்ளிக் கூடங்களையும் 26 ஆதரவற்றோர் இல்லங்களையும் 16 முதியோர் இல்லங்களையும் 19 பசு காப்பகங்களையும்  நிறுவியிருக்கிறார்.

சுமார் 1800 மாணவ மாணவியரின் கல்விக்காக தன் வருமானத்தை தனக்காக மட்டும் இல்லாமல் மக்களுக்காக பயனுள்ளதாகவும் தன் வாழ்நாளை தியாகம் செய்தி ருக்கிறார்.

இன்று இறந்த பிறகும் தன் மரணத்திலும் தனது இரண்டு கண்களையும் தானமாக வழங்கி ஒரு பாமரனின் வாழ்வில் புனீத் ஒளி ஏற்றியிருக்கிறார்.

மைசூரில் ஏழை மாணவர்களுக்காக “சக்தி தாமா” என்னும் பெயரில் ஒரு பள்ளியை கட்டி வருகிறார்.

கன்னட பவர் ஸ்டார் புனித் இன் மரணத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!