chennireporters.com

பஞ்சாப் சி.எம் கான்வாய் மறிப்பு.. இறங்கி வந்து செய்த தரமான சம்பவம்!

பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங்கிற்கு அம்மாநில பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து பாஜகவினர் போராட்டம் செய்து வருகிறார்கள்.

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க பஞ்சாப் முதல்வர் மறுத்துவிட்டார். அவர் இதனால் பதவி விலக வேண்டும் என்று கூறி பஞ்சாப்பில் முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவினர் கடுமையாக போராட்டம் செய்து வருகிறார்கள்.

இதை பார்த்ததும் சரண்ஜித் சிங் இண்டர்வியூ எடுத்தவரிடம், அங்கே பாருங்கள்.. மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இதேதான் பிரதமர் மோடி சென்ற போதும் நடந்திருக்கும்.

இதில் உயிருக்கு என்ன ஆபத்து இருக்க முடியும்? உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது. போராட்டக்காரர்களிடம் பிரதமர் மோடி நினைத்து இருந்தால் பேசி இருக்கலாம்.

நானும் நம்முடைய பிரதமரை மதிக்கிறேன். அவர் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவரின் உடல் நலத்திற்காக நானும் கடவுளிடம் வேண்டுகிறேன்.

போராட்டம் செய்வது என்பது மக்களின் உரிமை. அதை தவறு என்று சொல்ல முடியாது. பஞ்சாப்பில் தேர்தல் நடக்கிறது. இன்னும் 2-3 நாட்களில் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், என்று சரண்ஜித் சிங் குறிப்பிட்டார்.

ஆனால் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர் காரை நகர முடியாமல் தடுத்துக்கொண்டே இருந்தனர். இதனால் கார் செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது. உடனே முதல்வர் சரண்ஜித் சிங், காரை நிறுத்து என்று டிரைவரிடம் கூறினார்.

காரை நிறுத்து நானே நேராக சென்று அவர்களிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று டிரைவரிடமும், அருகே இருந்த செய்தியாளர்களிடமும் தெரிவித்தார். கார் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து காரில் இருந்து இறங்கி போராட்டக்காரர்களிடம் சென்ற முதல்வர் சரண்ஜித் சிங், அங்கே இருந்தவர்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார். ஒரு சிலர் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்றனர்.

சில போராட்டக்காரர்கள் வேறு சில கோரிக்கைகளை வைத்தனர். இதையடுத்து அவர்களிடம் பேசிய சரண்ஜித் சிங், உங்கள் கோரிக்கைகளை செவி மடுக்கிறேன். இப்போது அவசரமாக செல்கிறேன்.

11 மணிக்கு முதல்வர் அலுவலகம் வாருங்கள். பேசலாம். அங்கே உங்கள் குறைகளை நேரில் கேட்கிறேன் என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து மீண்டும் காருக்கு வந்த முதல்வர் சரண்ஜித் சிங், பாருங்கள் என்னுடைய காரை போராட்டக்காரர்கள் நிறுத்தினார்கள். நான் என்னுடைய காரை நிறுத்தி, அவர்களிடம் நேரில் சென்று பேசினேன்.

எனக்கு ஏதாவது ஆகிவிட்டதா? பிரச்னையை இப்படித்தான் சரி செய்ய வேண்டும். பிரதமர் மோடிக்கு அன்று எந்த விதமான ஆபத்தும் இல்லை. அது ஒரு ஜனநாயக ரீதியாக போராட்டம். அந்த போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்தது.

பிரதமரை தாக்க யாரும் முயலவில்லை. இதை பாஜக வேண்டும் என்றே பெரிதாக்க முயன்று கொண்டு இருக்கிறது, என்று முதல்வர் சரண்ஜித் சிங் விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க.!