chennireporters.com

#Put away the reading glasses! இனி ரீடிங் கண்ணாடியை தூக்கி தூர போடுங்க! சொட்டு மருந்து போட்டாலே கண் பார்வை சரியாகுமாம்.

இனி ரீடிங் கண்ணாடியை தூக்கி தூர போடுங்க! சொட்டு மருந்து போட்டாலே கண் பார்வை சரியாகும் என்று ஒரு செய்தி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.  அது என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.ரீடிங் கண்ணாடிகளின் தேவையை மொத்தமாக நீக்கக்கூடிய ஒரு கண் சொட்டு மருந்தை இப்போது பிரபல மருந்து நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கு இந்தியாவில் ஒப்புதல் தரப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் இந்த சொட்டு மருந்து விற்பனைக்கு வர உள்ளது. இனி எங்குப் போனாலும் கண்ணாடியை எடுத்துச் செல்ல தேவையே இருக்காது.இந்த நவீனக் காலத்தில் கண் கண்ணாடிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் 40 வயதைக் கடந்தாலே ரீடிங் கண்ணாடிகள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

இதற்கிடையே ரீடிங் கண்ணாடிகளை மொத்தமாக அகற்றக்கூடிய புதிய கண் சொட்டு மருந்துகளுக்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் என்ற இந்த நிறுவனம் பிரஸ்போபியா சிகிச்சைக்காக பிரஸ்வியூ (PresVu) என்ற கண் சொட்டு மருந்துகளை உருவாக்கியுள்ளது.. பிரஸ்போபியா பாதிப்பால் உலகெங்கும் 180 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.பிரஸ்பியோபியா என்பது வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் ஒரு குறைபாடாகும். இந்த பாதிப்பு இருப்போருக்கு அருகே உள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாது. புத்தகங்களைப் படிக்கச் சிரமப்படுவார்கள். இது பொதுவாக 40களின் இறுதியில் தொடங்கி 60களில் மோசமான நிலைக்குச் செல்லும். இந்த பிரச்சினைக்கே இப்போது என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் சொட்டு மருந்தை உருவாக்கியுள்ளது.என்டோட் ஃபார்மாசூட்டிகல்ஸ் உருவாக்கிய இந்த மருத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் இப்போது அனுமதி அளித்துள்ளது. பிரஸ்பியோபியா உள்ள 40 வயதைத் தாண்டியவர்களின் கண்ணாடி தேவையைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கண் சொட்டு மருந்து இதுவாகும் என்று கூறப்படுகிறது. இதற்கான அனுமதி இப்போது கிடைத்துள்ள நிலையில், மருந்து மற்றும் உற்பத்தி செயல்முறைக்குக் காப்புரிமை பெறவும் அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

என்ன செய்யும்: இந்த கண் சொட்டு மருந்து கண்ணாடிகளின் தேவையை நீக்குவது மட்டுமின்றி, கண்கள் வறண்டு போகாமலும் பார்த்துக் கொள்கிறது. ஆண்டுக் கணக்கில் பயன்படுத்தினாலும் நமது கண்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த சொட்டு மருந்தை வடிவமைத்துள்ளனர்.பிரஸ்வியூ சொட்டு மருந்துக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது கண் மருத்துவத்தில் ஒரு மைல்கல் என்றும் இது ரீடிங் கண்ணாடிகள் தேவையை நீக்கிவிடும் என்றும் டாக்டர் தனஞ்சய் பாக்லே கூறினார். இது பிரஸ்போபியாவால் பாதிக்கப்பட்டோருக்கு மிகப் பெரிய ஊதியாக இருக்கும். இந்த காலத்தில் கிட்டதட்ட 40 வயதைத் தாண்டிய அனைவரும் இதனால் பாதிக்கப்படும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.கண் பார்வை சுதந்திரம்: இது குறித்து அந்த மருத்து நிறுவனத்தின் சிஇஓ நிகில் கே மசுர்கர் கூறுகையில், “பல வருட ஆராய்ச்சிக்கு பிறகே பிரஸ்வியூ உருவாக்கப்பட்டுள்ளது. இது பல கோடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு தீர்வாகும். அவர்களுக்கான பார்வை சுதந்திரத்தை இந்த கண் சொட்டு மருந்து வழங்கும்” என்றார். இந்த பிரஸ்வியூ நமது கண்களில் சில நிமிடங்களில் செயல்படத் தொடங்குமாம்.. சொட்டு மருந்தைக் கண்களில் போட்டால் அடுத்த 15 நிமிடங்களுக்குள் பார்வையைத் திறன் மேம்படும் என்றும் நிகில் கூறியுள்ளார்.

இன்னும் சில நாட்களில் இந்த கண் சொட்டு மருந்து விற்பனைக்கு வரும். ரூ.350க்கு இந்த சொட்டு மருந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 40 முதல் 55 வயதுடைய நபர்களுக்கு லேசான முதல் மிதமான பிரெஸ்பியோபியா இருந்தால் அதைக் குணப்படுத்த இது உதவும்.

இதையும் படிங்க.!