புழல் பிடிஒ சித்ரா தன் பணி காலத்தில் நடந்த ஊழல்களை மறைத்து நீதிமன்றத்தில் பொய்யான தகவலை சொல்லி நீதிபதியை ஏமாற்றி இருக்கிறார். இந்த செய்தி குறித்து இவரால் பாதிக்கப்பட்ட மல்லிகா மீரன் என்பவர் தெளிவாக தனது விளக்கத்தின் மூலம் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
சித்ரா பெர்ணாண்டோ அவர்கள் 24/03/2023 முதல் 23/11/2023 வரை புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருந்ததை மறந்துடாங்க போல. கொஞ்சம் நியாபகடுத்துற மாதிரி சொல்லனும்னா போடாத layout ற்கு அனுமதி கொடுத்தது, முறைகேடாக கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்தது 24/03/2023 முதல் 23/11/2023 ஆணையாளராக இருந்தபோதுதான். இதற்கும் இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
சித்ரா பெர்ணாண்டோ
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாங்காடுபாக்கம் மற்றும் சென்றம்பாக்கம் ஊராட்சிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், குடோன்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் இயங்கி வருவதாகவும்.
அதில் ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே முறையாக அனுமதி பெற்று இயங்கி வருவதாகவும், பல கட்டிடங்கள் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக சுமார் 154 கட்டிடங்களை ஆய்வு செய்ய கோரி புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் CMDA அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்திருந்தேன் .
எனது புகார் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் 154 கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி பலமுறை சென்னை உயர் நீதி மன்றம் மூலம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தும், சென்னை உயர் நீதி மன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்காததால், கடந்த 04/12/2024 அன்று சென்னை உயர் நீதி மன்றம் மூன்று வழக்கறிஞர்களை ஆணையாளார்களாக நியமித்து தலா ஒரு வழக்கறிஞருக்கு ரூ.1,00,000/- வீதம் ஆரம்ப ஊதியமாக வழங்க வேண்டும் என்றும், மேற்கண்ட தொகையை இரண்டு (2) வாரங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அரசு வழக்கறிஞர் பாலதண்டாயுதம் 154 கட்டிடங்களில் 10கட்டிடங்கள் மட்டுமே முறையாக அனுமதி பெற்று இயங்கி வருவதாகவும், மற்ற கட்டிடங்கள் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாகவும் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் தன்மை மற்றும் கோரிக்கையை கருத்தில் கொண்டு வழக்கில் ஒரு தரப்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை தானாக முன்வந்து 160 – வது பிரதிவாதியாக சேர்க்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் அட்வகேட் கமிஷனர்கள் அப்பகுதிக்கு சென்று கட்டிடங்களின் தன்மை மற்றும் பரப்பு மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை 20/01/2025 க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் புழல் காவல் நிலையம், வழக்கறிஞர் கமிஷனர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.1. இந்த வழக்கின் விசாரணை அன்று புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையார் சித்ரா பெர்ணான்டோ ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கிறார் அதில் 24/07/2024 அன்று தான் புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பொறுப்பேற்றதாக கூறியுள்ளார். ஆனால் சித்ரா பெர்ணாண்டோ அவர்கள் 24/03/2023 முதல் 23/11/2023 வரை புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருந்ததை மறந்துடாங்க போல. கொஞ்சம் நியாபகடுத்துற மாதிரி சொல்லனும்னா போடாத layout ற்கு அனுமதி கொடுத்தது, முறைகேடாக கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்தது 24/03/2023 முதல் 23/11/2023 ஆணையாளராக இருந்தபோதுதான். இதற்கும் இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. விளாங்காடுபாக்கம் மற்றும் சென்றாம்பாக்கம் ஊராட்சிகளில் 140க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்கி வருவது பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எப்படி தெரியாமல் போனது?3. அனுமதி பெறாமல் முறைகேடாக இயங்கி வரும் 140க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு பஞ்சாயத்து மூலம் வரி இரசீதுகள் வழங்கப்பட்டது எப்படி ?
4. மேலும் 154 கட்டிடங்களை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்ததில் 10 கட்டிடங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளதாக பொய்யான தகவலை நீதி மன்றத்திற்கு கொடுத்திருக்கிறார். சித்ரா பெர்ணாண்டோ 154 கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்யவில்லை என்பதே உண்மை. சென்னை உயர் நீதி மன்றம் மூலம் நியமிக்கப்பட்ட அட்வொகேட் கமிஷ்னர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்போது உண்மை தெரியவரும்.
5. இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதி மன்றம் மூலம் நியமிக்கப்பட்ட மூன்று வழக்கறிஞர்களுக்கு தற்காலிக ஆரம்ப ஊதியமாக தலா ரூ.1,00,000/- வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஊதியம், அரசு அதிகாரிகள் தனது கடமையை சரிவர செய்யாததால் அரசுக்கு விதிக்கப்பட்ட அபராதமாக நான் கருதுகிறேன். மேலும் மேலும் தமிழக அரசுக்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் அவர்களை ஊக்குவிக்கும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
6. புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது இது வரைக்கும் எண்ணிலடங்கா புகார் மனுக்கள் கொடுத்தும், எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது புரியாத புதிராக உள்ளது. என்று மல்லிகா மீரான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
திருடுவதற்கும், பொய்சொல்லுவதற்கும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமான தைரியமும் மன பலமும் என்பார்கள் அதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் இதையெல்லாம் கண்டு கொள்ளாதே நீதிமன்றத்தின் கண்களுக்கும் காதுகளுக்கும் நாம் செய்த தவறுகள் தெரியாது என்ற கர்வத்தில் உடல் பிடிஓ சித்ரா நீதிமன்றத்திலேயே ஆஜராகி பொய்யான பல தகவல்களை கூறியுள்ளார் விரைவில் நீதிமன்றம் அவருக்கு தக்க நடவடிக்கை அளிக்கும் என்று தெரிகிறது.