கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி புழல் பிடிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் தொடர்புடைய தின கூலி பெண் ஊழியர் ஈஸ்வரி என்பவருக்கு தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு திருவள்ளூர் மாவட்ட வருவாய் ஊழியர்கள் சங்க சார்பில் ஒரு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி புழல் பிடிஒ அலுவலக ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை நாம் நமது வாசகர்களுக்கு அப்படியே வழங்குகிறோம்.
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 25/04/2024 அன்று 11 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு FIR போடப்பட்டுள்ளது. மேலும் போலிசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களும் செய்தியும் வெளியாகி இருந்தது.
அதேபோன்று கடந்த நான்கு ஆண்டுகளாக மனைப்பிரிவிற்கு அனுமதி வழங்கியது குறித்த ஆவணங்களையும் மற்றும் வீடு, தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், குடோன்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது குறித்தும் பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஏறக்குறைய 50 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும் அது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எடுத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக நாம் நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறோம். https://www.chennaireporters.com/news/puzhal-bdo-office-anti-bribery-department-raid-for-11-hours-at-puzhal-
மேலும் புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அனுமதி இல்லாமல் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்த திருமதி. ஈஸ்வரி மற்றும் யுவாதிகா ஆகியோரை கடந்த நான்கு வருடங்களாக புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
BDO சித்ரா மற்றும் ஈஸ்வரி.
எந்த ஒரு அனுமதியும் , அரசாணையும் இல்லாமல் லஞ்சப் பணம் பெறுவதற்காக ஈஸ்வரி என்ற பெண்ணை புழல் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தங்கமணியின் கணவர் திருமால் மூலமாக பணி அமர்த்தி, ஈஸ்வரி மூலம் புழல் BDO அலுவலகத்தில் கொடுக்கப்படும் திட்ட வரை பட அனுமதிகளுக்கு முறைகேடாக பல கோடிகளை லஞ்சமாக பெற்றுள்ளனர்.
மேலும் புழல் சேர்மன் தங்கமணி கணவர் திருமால், எருமைவெட்டிபாலையாத்தை சேர்ந்த திருமாலின் புரோக்கர் வீரா மற்றும் புழல் BDO அலுவலகத்தில் பணி புரிந்த ஈஸ்வரி ஆகியோர் திட்டமிட்டு புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலிசில் சிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
BDO சித்ரா
சேர்மன் சொல்லும் கோப்புகளில் அதிகாரிகள் கையெழுத்து போட மறுத்து வந்ததால், திருமால் மற்றும் புரோக்கர் வீரா மூலம் ஈஸ்வரிடம் பணம் கொடுத்து அலுவலக பீரோ வில் வைத்து லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் சேர்மன் தங்கமணி, அவரது கணவர் திருமால், வீரா மற்றும் ஈஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தால் பல்வேறு உண்மைகள் வெளி வரும் என கூறப்படுகிறது.
BDO ஆபிசில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய ஈஸ்வரி.
தினக்கூலி ஊழியர் ஈஸ்வரி பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டியுள்ளார். தங்க நகைகளும், பிளாட்டுகளும் வாங்கி வைக்கப்பட்டுள்ளதாக அலுவலக ஊழியர்கள் கூறி வருகின்றனர். அதிகாரிகளுக்கு தெரியாமல் ஈஸ்வரி பல ரியல் எஸ்டேட் பிரமுகர்களிடம் பல லட்சம் ரூபாய் தனியாக லஞ்சமாய் பெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே ஈஸ்வரியை கைது செய்து அவரிடம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
திமுக சேர்மன் தங்கமணியின் கணவர் திருமால்.
தற்போது ஈஸ்வரி வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி நாம் ஈஸ்வரியை பல முறை தொடர்பு கொண்டோம். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவரது வாட்ஸ் அப் நம்பருக்கு இந்த செய்தி குறித்து பல முறை விளக்கம் கேட்டு செய்தி அனுப்பி இருந்தோம்.
BDO ஆபிசில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய ஈஸ்வரி.
அந்த செய்திக்கும் இது வரை அவரிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை இது குறித்து ஈஸ்வரி அவரது விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.