தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத நடிகை என்றால் அது ராதிகா மட்டும்தான்.1980, 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழந்தவர் ராதிகா.
கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா.அவர் தொடர்ந்து ரஜினி, கமல், விஜய்காந்த் சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் 90 களின் இறுதியில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ராதிகா பல தமிழ் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்தும் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான சித்த தொடர் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலுமே கொடி கட்டி பறந்த நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டு தனது கணவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
சினிமா மற்றும் அரசியலில் பிஸியாக இருந்தாலும், ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து வெளியில் பிக்னிக் செல்வதை தொடர்ந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் ராதிகா கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு நடிகை ராதிகா நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், இந்த வயதிலும் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வியப்புக்குரிய தாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் சினிமா உலகத்தினர்.
சின்னத்திரையில் இருந்து ராதிகா விலகிவிட்டாலும், சினிமாவில் அவருக்கான வாய்ப்பும் குறையவில்லை வயதும் குறையவில்லை என்றே கூறலாம். ராதிகாவின் இந்த நீச்சல் உடை புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களை தற்போது ஆக்கிரமித்து வருகிறது.