chennireporters.com

#raging atrocities at indira medical college ; திருவள்ளூர் இந்திரா மருத்துவ கல்லூரியில் ராகிங் கொடுமை, MBBS மாணவன் அடித்து கொலை.

#Indira medical College Exclusive and special story.  #Ragging atrocity MBBS student murder.

திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் அமைந்துள்ள இந்திரா மருத்துவ கல்லூரியில் ராகிங் கொடுமையால் எம்பிபிஎஸ் படித்து வந்த  இரண்டாம் ஆண்டு மாணவன் அஷெர் இம்மானுவேல் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சுந்தர் நகர் முத்தையா புரத்தை சேர்ந்தவர் ரகு என்பவரின் மகன் அஷெர் இம்மானுவேல் இவர் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த பாண்டூர் கிராமத்தில் உள்ள இந்திரா மெடிக்கல் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். இவருடன் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த  இவரது சீனியர்கள் நான்கு பேர் அஷெர் இம்மானுவேலை அடிக்கடி ராகிங் செய்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.அதாவது கேன்டீனுக்கு சென்று சாப்பாடு வாங்கி வரச் சொல்வது, கூல்ட்ரிங்ஸ் வாங்கி வரச் சொல்வது வெளியில் சென்று சிகரெட் வாங்கி வரச் சொல்வது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இறந்து போன மாணவனின் மாமா பேசி நமக்கு அனுப்பிய ஆடியோ.

இது குறித்து பலமுறை ஹாஸ்டல் நிர்வாகத்திடமும் அவரது உறவினர் மற்றும் அம்மாவிற்கும் அஷெர் இம்மானுவேல் தகவல் சொல்லியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அதாவது ஏப்ரல் மாதம் எட்டாம் (8/4/2026) தேதி மதியம் 2 மணி அளவில் கேண்டினுக்கு சென்று சாப்பாடு வாங்கி வரச் சொல்லி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.அப்போது செய்ய முடியாது என மறுத்த அஷெர் இம்மானுவேலை சீனியர்களான கவின், சிவப்பிரியன், ரஷீத், புகழ் ஆகிய நான்கு பேரும் சரமாரியாக அடித்து துரத்திக் கொண்டு வந்து ஐந்தாவது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

ஹாஸ்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்கின்றனர் இறந்து போன மாணவனின் பெற்றோர்கள்.

இதுகுறித்து சம்பவம் நடந்ததும் ஹாஸ்டலில் உள்ள வெளி மாநில மாணவர்கள் கத்தி கூச்சலிட்டபோது ஹாஸ்டல் நிர்வாகிகள் யாரும் உடனே வரவில்லை.  சில நிமிடங்கள் கழித்து செல்போனில் அழைத்து தகவல் சொன்னதும் சம்பவ இடத்திற்கு வந்த ஹாஸ்டல் நிர்வாகிகள் மாணவன் தலையில் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் தரை தளத்தில் உடல் கீழே இருந்துள்ளது. அந்த இடத்திலேயே அஷெர் இம்மானுவேல் துடிதுடித்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது .அதன் பிறகு தங்களது கல்லூரியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அஷெர் இம்மானுவேலின் உடலை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆகிறது. என்று தெரிவித்து நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனை அறையில் வைத்துள்ளனர். இது குறித்து இந்திரா காலேஜ்  ஹாஸ்டல் நிர்வாகி 936052248 என்ற எண்ணில் இருந்து பேசிய ஒருவர் இமானுவேலின் அம்மாவுக்கு தங்களது மகன் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக தகவல் சொல்லி உள்ளனர்.

திட்டமிட்ட கொலை:

இதை கேள்விப்பட்ட மாணவனின் பெற்றோர் அதிர்ச்சியில்  உரைந்து போனார்கள். அதன் பின்னர் அலறி அடித்து கொண்டு தூத்துக்குடியிலிருந்து  சென்னை வந்தனர்.  தனியார் கார் மூலம் சம்பந்தப்பட்ட இந்திரா கல்லூரிக்கு சென்று  என்ன நடந்தது என்பதை கேட்டு திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் என் மகன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறான். மேற்படி கவின், சிவப்பிரியன், ரஷீத், புகழ் தான் என் மகனின் மரணத்திற்கு காரணம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.ஆனால் புகாரைப் பெற்ற போலீசார் கொலை வழக்காக பதிவு செய்யாமல் சந்தேகத்திற்குரிய மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கல்லூரியின் நிர்வாகத்தின் தரப்பில் இந்திரா அவர்களின் கணவரும் தற்போதைய திருவள்ளூர் திமுக எம்எல்ஏவுமான விஜி ராஜேந்திரன் இறந்து போன மாணவனின் பெற்றோரிடத்தில் சமரசம் பேசியுள்ளார்.ஆனால் அந்த சமரச பேச்சு வார்த்தையில்  எதுவும் உடன்பாடு ஏற்படாத நிலையில் புகார் அளித்துள்ளனர். அந்த சமரச உடன்பாட்டில் மாணவனின் பெற்றோரை இந்திரா கல்லூரின் நிர்வாகியும்  இந்திராவின் கணவருமான விஜி ராஜேந்திரன் இறந்து போன மாணவன்  அஷெர் இம்மானுவேலின் பெற்றோரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

கொலையாளிகளை காப்பாற்றும் கல்லூரி நிர்வாகம்:

எந்த காரணத்திற்காக குற்றவாளிகளை கல்லூரி நிர்வாகம் காப்பாற்றுகிறது. என்று தெரியவில்லை என்கிறார் இறந்து போன மாணவனின் பெற்றோர் அந்த கல்லூரியில் சிகரெட், கஞ்சா, மது போதைகள் இரவு நேரங்களில் பியர், பிராந்தி போன்ற மது வகைகளும் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்கின்றனர். இறந்து போன மாணவனின் பெற்றோர்.எனவே மேற்படி கவின், சிவப்பிரியன், ரஷீத், புகழ் மீது கொலை செய்ய தூண்டியதாகவும் கொலைக்கு காரணமாக இருந்து அவனை கொலை செய்ததாகவும் போலீசார் வழக்கை பதிவு செய்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அஷெர் இமானுவேலின் பெற்றோர். எனவே கல்லூரி நிர்வாகம் என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக தெரிவித்தால் மட்டுமே இந்த மரணத்தில் என்ன நடந்தது என்பது வெளியே தெரிய வரும்.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா தனியார் மற்றும் அரசு மருத்துவமனை கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் விடுதிகளிலும் உளவியல் ரீதியான அறிவுரை (COUNSELING) வழங்க வேண்டும். சைக்காலஜிக்கலாக மாணவர்களுக்கு தற்கொலைக்கான எண்ணம் வரக்கூடாது.  என்றும் மாணவர்களுக்கு என்ன பிரச்சனைகள் என்பதை கல்லூரி நிர்வாகம் வாரம் ஒரு முறை ஆலோசனை வழங்க வேண்டும். ஒரு புகார் பெட்டி வைத்து அதன் மூலம் வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் சம்மந்தப்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சென்று புகார் அளிக்கலாம் என்று வலியுறுத்த வேண்டும்.  அப்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம் அது போன்ற ஒரு சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கல்லூரி விடுதிக்குள் அனைத்து வகையான மது பானங்களோ அல்லது கஞ்சா சிகரெட் போன்ற எந்த விதமான போதை வஸ்துக்களை வைத்துக்கொள்ள நிர்வாகம் அனுமதிக்க கூடாது  அப்படி வைத்திருக்கும் மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யவேண்டும் என்கின்றனர்  சமூக ஆர்வலர்கள்.

தங்கள் தரப்புக்கு ஏற்பட்டிருக்கும்  இழப்பை போல எதிர்தரப்பினருக்கும் ஒரு இழப்பு ஏற்பட்டிருந்தால் தான் வலி என்ன என்று உணர முடியும் என்கிறார் இறந்து போன மாணவனின் தாயார்.

எனவே அரசியலில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விஜி ராஜேந்திரன் ஒரு பெற்றோரின் மன நிலையை உணருபவராக இருக்கவேண்டும் என்கின்றனர் உறவினர்கள்.  இழப்பையும், வலியையும் உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் நிற்பது தான் சமூக நீதி. எனவே ஆட்சி அதிகாரத்தில் பெரிய ஆளாக இருந்தாலும்  இந்த அதிகாரம் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்பதை விஜி ராஜேந்திரன் உணர வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் மற்றும்  உறவினர்கள்.

அதிர்ச்சி தரும் தகவல்;

தற்போது திருவள்ளூர் எம்எல்ஏவாக இருக்கும் விஜி ராஜேந்திரனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட அந்த கட்சி தலைமை அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் விஜி ராஜேந்திரன் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிடுகிறார். இதில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்களது கல்லூரி மாணவர்கள் மட்டும் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் வெளியூர் மாணவர்களை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த கட்டாயப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தேர்தல் ஆணையம் கடும் கண்டனத்தையும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்கின்றனர்.

தற்போது எம்எல்ஏவாக இருந்து தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஆண்ட பரம்பரையில் பிறந்த பெரிய…… போல ராஜேந்திரன் நடந்து கொள்வது தொகுதி மக்களுக்கு சிறிதளவும் பிடிக்கவில்லை.

புதிய நபரை வேட்பாளராக களம் இறங்கி இருக்கலாம் என்கின்றனர் உடன் பிறப்புக்கள். கட்சி தலைமையிக்கு நெருக்கமாக இருந்து வரும் ஜெகத்ரட்சகன் விஜி ராஜேந்திரனின் ஆதரவாளராகவும் விஜி ராஜேந்திரனுக்காக எதை வேண்டுமானாலும் செய்து தரக்கூடிய அளவிற்கு நட்பு பாராட்டி வரும் ஜெகத்ரட்சகன் மேலிடத்தில் சொல்லி மீண்டும் ராஜேந்திரனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தந்துள்ளார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.தனது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர முடியாத ஒருவர். மக்களுக்காக என்ன மக்கள் பணி செய்யப் போகிறார் என்கிறார்கள் திருவள்ளூர் தொகுதி மக்கள். மக்களாவது, மண்ணாங்கட்டியாவது என்ற எண்ணத்தில் தான் தற்போதைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

எனவே கட்சி தலைமையோ அல்லது ஜெகத்ரட்சகன்  விஜி ராஜேந்திரனோ கல்லூரியின் நிர்வாகி இந்திராவோ மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டால் மனிதம் வாழும். இல்லையென்றால் மனிதம் சாகும். இது குறித்து கல்லூரி தரப்பினரை பல முறை தொடர்பு கொண்டோம் யாரும் நமது அழைப்பை ஏற்கவில்லை அஷெர் இம்மானுவேல் கொலை குறித்து இந்திரா கல்லூரி நிர்வாகம் தனது தரப்பு விளக்கை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!