chennireporters.com

தேர்தலில் களமிறங்கும் ரங்கசாமி விஜய் கூட்டணி.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதேபோல் பாண்டிச்சேரியிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குகிறது.

ரங்கசாமி கட்சியுடன் விஜய் மக்கள் இயக்கம் இணைந்து கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கு வசதியாக இருக்கும்
என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்த பின்னர் விஜய் ரங்கசாமி சந்திப்பு உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு ரங்கசாமி நேரில் வந்து விஜயை சந்தித்தார்.சுமார் ஒருமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.பின்னர் ரங்கசாமி விஜயுடன் நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் மேலிட உத்தரவின்படி ரங்கசாமி நடிகர் விஜய்யை தொடர்பு கொண்டு தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவேண்டும் என்று வலியுறுத்தியதாக   கூறப்படுகிறது.

அந்த உத்தரவின் பேரிலேயே பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நடிகர் விஜய் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க.!