பிக் பாஸ் வீட்டில் வேலை செய்யும் ஒரு இளைஞர் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கற்பழித்த நிலையில் நீதி கேட்டு போராடும் பெண்ணிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் பெண் இன்ஸ்பெக்டர் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரல் ஆகி வருகிறது.
ஜெயா.
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வசிப்பவர் ஜெயா வயது 35 பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் வீட்டில் கேண்டினில் வேலை செய்து வருகிறார். ஏற்கனவே திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
பிக் பாஸ் செட்.
அதே பிக் பாஸில் செட்டில் வேலை செய்து வரும் கிரண் என்பவர் ஜெயாவிடம் நன்கு பேசி பழகி வந்துள்ளார். பிறகு அவரை காதலிப்பதாகவும், ஜெயாவுக்கு மறுவாழ்வு கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். அடிக்கடி ஜெயா வீட்டிற்கு கிரண் சென்று வந்தார். பிறகு ஒரு நாள் ஜெயாவின் வீட்டில் பூஜை அறையில் வைத்து ஜெயாவிற்கு கிரண் தாலி கட்டினார்.
கிரண்.
பின் நாளில் ஜெயாவிடம் கிரண் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்றும் நான் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை என்றும் உன்னை விட்டு நான் எப்போதும் பிரியமாட்டேன் என்றும் கடைசி வரை உன்னை காப்பாற்றுவேன் என்று கூறி ஜெயாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஜெயாவின் செல்போனுக்கு ஒரு மர்ம நபர் பேசியுள்ளார். அதில் நீ திருமணம் செய்துள்ள கிரண் நல்லவர் இல்லை. அவர் மிக மோசமான ஆள் அவரால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று பேசி அதிர்ச்சி தகவலை சொன்னார். அது குறித்து ஜெயா கிரணிடம் கேட்டபோது அவர் பல மழுப்பலான பதில்களை சொல்லி தட்டிக் கழித்தார். மெல்ல மெல்ல வீட்டுக்கு வருவதையும் ஜெயாவிடம் பேசுவதையும் கிரண் நிறுத்திக் கொண்டார். இதில் இருவருக்கும் மோதல் தொடங்கிவிட்டது.
பிக் பாஸ் மேனேஜர் மகேஷ்.
தொடர்ந்து ஜெயா கிரண் செல்போனுக்கு தொடர்பு கொண்டால் கிரண் போனை எடுக்காமல் தட்டி கழித்து வந்தார். கிரண் பற்றியும் அவரது மேனேஜர் மகேஷ் பற்றியும் பல அதிர்ச்சி தரும் தகவல்களை ஜெயாவுக்கு கிடைத்தது. இதில் ஆத்திரமடைந்த ஜெயா தொடர்ந்து கிரணிடம் பேச முயற்சி செய்தார். ஆனால் கிரண் பேசாமல் மகேஷ் ஜெயாவிடம் பேசி சமாதானமாக போகும்படி மிரட்டி இருக்கிறார். ஆனால் ஜெயா சமரசம் செய்யாமல் கிரண் தன்னிடம் வந்து வாழவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.
ஆனால் மேனேஜர் மகேஷ் கிரணிடம் அவளுடன் வாழக்கூடாது என்று தடுத்து வந்தார். கிரண் ஜெயாவுக்கு தாலி கட்டியதை புகைப்படம் எடுக்கவில்லை அந்த திருமணத்தை பதிவு செய்யவும் இல்லை. திருமணத்தை பதிவு செய்ய ஜெயா வற்புறுத்திய போது கிரண் மறுத்துவிட்டார். அதாவது கிரண் பல்வேறு பெண்களோடு கள்ள தொடர்பும் வைத்திருந்தார். ஜெயாவிடம் உல்லாசமாக குடும்ப நடத்தி வந்த கிரண் தன்னுடைய உண்மை முகம் ஜெயாவுக்கு தெரிந்து விட்டதை தொடர்ந்து மெல்ல மெல்ல ஜெயா வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டார்.
பல முக்கிய அதிர்ச்சி தரும் சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நடப்பதாகவும், பல அழகிய பெண்களின் கற்பு சூறையாடப்பட்டு இருப்பதும் ஜெயாவிற்கு தெரிய வந்தது. பிக் பாஸ் வீட்டு நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடக்கிறதோ அதே போல் அரங்குக்கு வெளியே மகேஷும், கிரணும் பல பாலியல் ரீதியான விஷயங்களை செய்து வருகிறார்கள். ஆனால் அந்த செய்திகள் எல்லாம் தற்போது வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ஜெயா இரண்டு மாதம் கர்ப்பமானார். தான் கர்ப்பமான தகவலை கிரணுக்கு தெரிவிக்க முயற்சி செய்தபோது கிரண் போன் எடுக்கவில்லை. ஜெயா கிரண் வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்பினார். அந்த வாய்ஸ் மெசேஜ்யில் தான் இரண்டு மாதமாக உன் வாரிசை வயிற்றில் சுமக்கிறேன் எனவும் அது ஆண் குழந்தையாக தான் இருக்கும் எனவும் சந்தோசப்பட்டு பேசியிருந்தார். ஜெயாவிடம் பேசுவதை தவிர்த்து வந்த கிரண் ஜெயாவின் ஆடியோவை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஜெயாவிடம் பேசி நான் வீட்டுக்கு வருகிறேன். இந்த குழந்தை நமக்கு தற்போது வேண்டாம். நாம் இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். நம்மை பலர் கேலி பேசுவார்கள் என்று பேசி அந்த கருவை கலைக்கும்படி ஜெயாவை வற்புறுத்தினார்.
கிரண்
ஆனால் ஜெயா தன் வயிற்றில் வளரும் கருவை கலைக்க மறுத்துவிட்டார். வீட்டிற்கு குடிபோதையில் வந்த கிரண் அந்த கருவை நீ கலைத்தால் தான் நான் உன்னிடம் தொடர்ந்து வாழ்வேன். இல்லையென்றால் என்னை உயிருடன் பார்க்க முடியாது என்று மிரட்டினார். நான் உன்னுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் நீ இந்த கருவை கலைத்தால் தான் நான் உன்னுடன் வாழ்வேன் என்று மிரட்டியும் கெஞ்சி கூத்தாடி கருவை கலைக்க சொன்னார். அதன் பிறகு தனது சொந்த ஊரான சித்தூரில் இருந்து தனக்கு வேண்டப்பட்டவர் மூலம் மருந்து மாத்திரைகள் வாங்கி வந்து ஜெயாவுக்கு கொடுத்தார். அதன் பிறகு ஜெயாவின் வயிற்றில் இருந்த கரு கலைக்கப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் ஜெயாவுடன் வீட்டிற்கு வந்து சென்ற கிரண் சந்தோஷமாக இருந்துவிட்டு மீண்டும் பழையபடி ஜெயாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டு தலைமறைவானார்.
மீண்டும் கிரண் செல்போனுக்கு ஜெயா தொடர்பு கொண்ட போது நான் பிஸியாக இருப்பதாக தட்டி கழித்து வந்தார். கிரண் பேச்சில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் ஜெயா பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம் கிரண் மீது புகார் அளித்தார். அந்த புகார் குறித்து இன்ஸ்பெக்டர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் இந்திராணி
மாறாக கிரண் தரப்பிடம் கொஞ்சம் கை செலவுக்கு பணம் வாங்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர் இந்திராணி ஜெயாவை நேரில் அழைத்து அவரது நடத்தையை அசிங்கப்படுத்தும் வகையில் பேசி ஜெயாவின் மனம் புண்படும்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அது தவிர உனக்கு ஏதாவது பணம் வேண்டுமா வாங்கித்தருகிறேன் என்று கட்டப்பஞ்சாயத்து பேசியிருக்கிறார். நீ ஒழுங்காக இல்லாமல் அவனுடன் ஊர் சுற்றி அரிப்பெடுத்து ஓடிப்போய் ரூம் போட்டு உறவு வைத்துக் கொண்டதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று ஜெயாவை அசிங்கமாக பேசி உன் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று புகாரை கிடப்பில் போட்டுவிட்டார்.
இந்த நிலையில் ஜெயா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.ஜெயாவின் புகாரை விசாரித்த மகளிர் ஆணையத் தலைவி ஆவடி துணை ஆனையர் மற்றும் பூந்தமல்லி உதவி ஆணையர் ஆகியோர் உடனடியாக ஜெயாவின் புகார் மனு மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட ஜெயாவுக்கு நீதி வழங்குபடியும் கிரண் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக பலமுறை பூந்தமல்லியில் உள்ள ஏசி அலுவலகத்திற்கு ஜெயாவை வரவழைத்து இன்ஸ்பெக்டர் இந்திராணி விசாரிப்பார் என்று தட்டிக் கழித்த ஏசி தனசெல்வம் உரிய நடவடிக்கையும் எடுக்கும்படி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திராணிக்கு உத்தரவிடவில்லை.
மாறாக இன்ஸ்பெக்டர் கிரண் தரப்பிடம் பேசி ஏசி அலுவலகத்திற்கும் செலவுக்கு பணம் கொடுத்து விடுங்கள் ஏசி தனக்கு நெருக்கடி கொடுக்கிறார் நான் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னதாக கூறப்படுகிறது. கிரண் தரப்பினரும் ஏசி ஆபிசுக்கு வெள்ளை பேப்பர் மற்றும் டீ செலவிற்கு கொஞ்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் இது வரை பூந்தமல்லி ஏசி தனசெல்வம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் தனசெல்வம்.
பெண்களுக்கு பாதிப்பு என்கிற போது வேகமாக நடவடிக்கை எடுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு. ஜெயா விஷயத்தில் மௌனம் காப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. பெண் காவலர்களை ஒருமையில் பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, இளம் பெண் ஒருவரை திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி கற்பழித்து அவள் வயிற்றில் வளர்ந்த கருவையும் அழித்த நபர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் பூந்தமல்லியை சேர்ந்த பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள்.
இந்த செய்தி குறித்து கிரண் மற்றும் மகேஷ் தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். அதே போல் ஜெயா புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் அவர்கள் தரப்பு விளக்கத்தை தெரிவித்தாலும் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.