chennireporters.com

#re-interrogate Seaman; சீமானிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீஸ் முடிவு.

சீமானிடம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் சீமான் 50 கேள்விகளுக்கு மேல் பதிலளித்துள்ளார் இருப்பினும் மீண்டும் போலீசார் சீமானிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.போலீஸ் விசாரணையில் புதிய கேள்விகள் ஏதும் கேட்கப்படவில்லை' - சீமான் | No new  questions asked in police investigation says Seeman - hindutamil.inநடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு வளசரவாக்கம் போலீசில் ஆஜரானார். அவரிடம் போலீசார்  சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

போலீஸ் விசாரணையில் சென்ற முறை கேட்ட அதே பழைய கேள்விகளை இந்த முறையும் கேட்டனர். புதிய கேள்விகள் எதுவும் என்னிடம் கேட்கப்படவில்லை. விசாரணைக்கு தாமதமாக வர காவல்துறையினர் தான் காரணம். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.

சீமானிடம் விசாரணை நிறைவு; ''நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி.''  சீமான் பேட்டி..! - Seithipunal

போலீஸ் விசாரணையில் என்ன நல்ல முறையில் நடத்தினார்கள். இந்த வழக்கை விசாரிக்க  மூன்று மாத காலம் அவகாசம் உள்ளது. மூன்றே நாளில் இதை விரைந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? எனக்கு சம்மன் கிடைத்த போது நான் வெளியூரில் இருந்தேன். மீண்டும் கொடுத்த சம்மனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு ஆஜர் ஆனேன் . இந்த வழக்கில் போலீஸ் தரப்பில்  வழக்கில் அழுத்தம் தரப்படுகிறது. ஆளும் திமுக அரசு இந்த வழக்கை நீட்டித்துக் கொண்டு செல்கிறது. என் வீட்டின் கதவில் ஒட்டப்பட்ட சம்மனை அகற்றியதில் எந்த தவறும் இல்லை.

எங்கள் வீட்டில் இருந்த இருவரை கைது செய்ததும் அவர்களை தாக்கியதும் தவறு. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் அப்படி இருக்கும்போது நீலாங்கரை காவல் நிலைய அதிகாரிகள் ஏன் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். சீமானிடம் விசாரணை நிறைவு; ''நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி.''  சீமான் பேட்டி..! - Seithipunalஎன் மீதுள்ள நற்பெயரை சிதைக்கும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது. புகார் அளித்த நடிகை கடந்த 15 ஆண்டுகளாக என்னை அவமானப்படுத்தி வருகிறார். அவர் விரும்பி வந்து அவர் உறவு வைத்து கொண்டார். எனக்கு திருமணம் ஆகி பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தைகள் குடும்பம் ஆகிவிட்டது. என் மீதான பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டதா என்று கேள்வி கேட்ட சீமான் இந்த விசாரணையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை போலீசார் என்னிடம் கேட்டனர். அதற்கு சீமான் அளித்த பதில் அனைத்தும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையின் இணையானையர் அதிவீரபாண்டியன் உதவி ஆணையர் செம்பேடு பாபு மற்றும் சில அதிகாரிகள் சீமானிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் சீமானை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திட்டமிட்டு பத்திரிகைகளும் இந்த அரசும் என்னை அவமானப்படுத்துகிறது என்று சொல்லும் சீமான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி# கற்பழித்ததை குற்றமாக கருதவில்லை. மேலும் நான் அவரிடம் உறவு வைத்துக் கொண்டேன் என்று போலீஸ் விசாரணையில் சொல்லும் சீமான் வெளியில் அதை பெருமையாக சொல்லுகிறார் . ஆனால் அவரது கட்சியில் உள்ள பெண்கள் சகோதர சகோதரிகள் எப்படி இதை ஏற்கிறார்கள் என்று சமூகவலைதளத்தில் பொதுமக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

விஜயலட்சுமி வழக்கு! சீமானுக்கு நாளை வரை கெடு! இல்லாவிட்டால் கைது? - சம்மனை  கிழித்த நாதக!

எனக்கு குடும்பம் இருக்கிறது மனைவி இருக்கிறார் என்று சொல்லும் சீமான் அவர்கள் எப்படி இதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது குறித்து பதில் ஏதும் சொல்லவில்லை.

மாறாக ஏற்கனவே பலமுறை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் என் மனைவி எவ்வளவோ பெண்கள் இருக்கிறார்கள் ச்சீ இந்த பெண்ணிடமா பழகினாய் என்று பெண்ணை கேலி செய்யும் வகையில் பொதுமக்கள் இடத்திலும் பத்திரிகையாளர்கள் இடத்திலும் கூறியுள்ளார்.

எனவே இந்த அரசு தனியாக பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் தேசிய மகளிர் ஆணையமும், மாநில மகளிர் ஆணையமும் சீமான் மீது தனியாக வழக்கு தொடுக்க வேண்டும் என்கின்றனர் மாதர் சங்க அமைப்புகளும் பொதுமக்களும்.

 

இதையும் படிங்க.!