ஈழத் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் பழ.நெடுமாறன் வேண்டுகோள்.

April 1, 2022

By இரா. தேவேந்திரன்.

உணவுப் பொருட்களின் பற்றாக்குறையினாலும், விலைவாசி உயர்வினாலும் இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும்.

பட்டினியால் சாகும் நிலை உருவாகியிருக்கிறதுகுறிப்பாக, ஈழத் தமிழர் நிலை குறித்து கிடைக்கும் செய்திகள் நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

ஈழத் தமிழர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் உதவி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு.

உதவி செய்யும் படி பிரதமர் மோடி அவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வேண்டிக்கொண்டிருப்பதை மனமாற வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

என்று தெரிவித்துள்ள அவர் தமிழக அரசு மட்டுமல்ல, மக்களும் பல்வேறு கட்சிகளும் இணைந்து நின்று ஈழத் தமிழர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள்.

மருந்துகள், துணிமணிகள் போன்றவற்றைத் திரட்டிக் கொடுக்க முன்வருமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன் என்று பழ .நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

(பழ.நெடுமாறன்)
தலைவர்.

Share:

இரா. தேவேந்திரன்.

April 1, 2022

Leave a Comment