chennireporters.com

#read the book anbum aalumaiyum ; எழுத்தாளர் ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ் அவர்கள் எழுதிய ”அன்பும் ஆளுமையும் ” புத்தகத்தை படியுங்கள்.

தமிழக மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ் அவர்கள் மிகவும் நேர்மையானவர். அவர் கலெக்டராக பணியாற்றிய காலத்தில் துணிச்சலுடன் ஒற்றை நபராக மணல் கடத்தலை தடுத்து வீரமங்கைக்கான சிறப்பு விருது வாங்கியவர்.மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ். 

கலெக்டர் முதல் பதிவுத்துறை செயலாளர் வரை தனக்கு கொடுத்த பணியை அற்பனிப்புடன் செய்தவர். எந்த அரசியல் கட்சியையும் சாராமல் சாதாரண குடும்பத்தில்  பிறந்த அவர் அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடும் அவர்  பெண்களின் சுதந்திரத்திற்காக எழுத்துப் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.அவர் தற்போது அன்பும் ஆளுமையும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் அவர் எந்த இடத்தில் அன்பு காட்ட வேண்டும். எந்த இடத்தில் ஆளுமை செலுத்த வேண்டும் என்பதை தனது வாழ்நாளில் சந்தித்த அனுபவங்களையும் அடிப்படையாக வைத்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.நிச்சயம் இந்த புத்தகம் பெண்களுக்கு வழிகாட்டியாகவும், உயர் பதவியில் அமர துடிக்கும் இளைஞர்களுக்கும் மற்றும் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கும் நிச்சயம் இது ஒரு பாடமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு பாடமாக இருக்கும் இந்தப் புத்தகத்தைப் படிக்க விரும்புவோர் 8838761217 என்ற வானதி பதிப்பகத்தின் எண்ணில் தொடர்பு கொண்டு இப்புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.. .தமிழக தேர்தல் ஆணையர் திருமதி ஜோதி நிர்மலா சாமி அவர்கள் ஏற்கனவே பெண்மை ஒரு வரம் என்கிற புத்தகத்தையும்,  அப்பா என்றொரு வரலாறு என்கிற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் எதையும் துணிச்சலுடன் எதிர்க்கும் ஆற்றல் கொண்டவர் ஜோதி நிர்மலா சாமி அவர்கள்.பெண் என்பதால் பயந்து கொண்டோ அல்லது எதையும் எதிர்க்கக் கூடிய சக்தி இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கும் சாதாரண பெண்களாக இல்லாமல் பாரதி கண்ட புதுமை பெண்ணாகவே தன்னை எப்போதும் வெளிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர் ஜோதி நிர்மலா சாமி.கடலூர் மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய பொழுது இரவு நேரங்களில் கூட பொதுமக்கள் தங்களுக்கு ஒரு குறை என்று தன் வீட்டருகே வந்து சொன்னால் ஒரு கணம் யோசிக்காமல் சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு நேரடியாக களத்திற்குச் சென்று பணியாற்றும் இரக்க குணம் கொண்டவர். இரவு நேரங்களில் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவத்திற்கு போராடுகிற நிலையில் டாக்டர்கள் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்பதை அந்த பெண்ணின் கணவர் ஜோதி நிர்மலா சாமி அவர்களுக்கு ஃபோன் மூலம் தகவல் சொன்னவுடனேயே நள்ளிரவு ஒரு மணி அளவில் தன்னந்தனியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களை அழைத்து அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்து தாயும் சேயும் நலமாக இருப்பதற்கு ஒரு பெண்ணாக அங்கேயே இருந்து பிரசவம் பார்த்து விட்டு வந்த இரக்க குணம் கொண்டவர் ஜோதி நிர்மலா சாமி.அப்படிப்பட்ட ஒரு நேர்மையான திறமையான போராட்ட குணம் கொண்ட ஒரு ஐஏஎஸ் அதிகாரியை சில பத்திரிகையாளர்கள் தீய எண்ணத்தோடு மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிரட்டி பார்த்தனர் தன் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்கிற தாரக மந்திரத்தை தன்னகத்தே கொண்டு செயல்படும் ஜோதி நிர்மலா சாமி எதையும் சந்திக்க தயாரானார். ஆனால் அந்த பத்திரிகையாளர்கள் இவரைப் பற்றி தவறாக எழுதினார்களே தவிர இவரை ஒன்றும் செய்ய முடியாமல் போனது அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை விரைவில் மாறும் அவர்கள் நிலைமை மோசமாகும் என்பதை காலமும் கடவுளும் தீர்மானிப்பார் என்கிறார் ஜோதி நிர்மலா சாமி ஐஏஎஸ் அவர்கள்.

இதையும் படிங்க.!