chennireporters.com

#real estate dons ; தமிழக அரசை ஏமாற்றி கல்லாக்கட்டும் திமுக ரியல் எஸ்டேட் தாதாக்கள்.

ஆவடி அருகே உள்ள வீராபுரம், மோரை, கன்னியம்மன் நகர், பங்காரம் பட்டு, புலிக்குத்தி, தேனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் போலியாக ஆவணங்களை தயார் செய்து நிலத்தை விற்பனை செய்வதே தொழிலாக கொண்டுள்ளனர் சில ரியல் எஸ்டேட் மாபியாக்கள். கோபி சர்வேயர்.

இவர்கள் பல ரவுடிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நிலத்துக்கு சொந்தமான உரிமையாளரை மிரட்டி அடிமட்ட விலைக்கு அந்த இடத்தை வாங்கி வேறொரு வேறு ஒருவருக்கு விற்பனை செய்வார்கள் அதாவது 1998 ஆண்டு ஒருவர் ஒரு இடத்தை வாங்கி வைத்திருந்தால் அதை கண்கொத்தி பாம்பாக கவனித்து அதற்கு ஒரு போலியான ஆவணத்தை தயார் செய்து வேறு ஒரு நபருக்கு குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள்.எந்த ஊரிலும் பத்திரப்பதிவு செய்யலாம்; மாற்றத்துக்கு தயாராகிறது பதிவுத்துறைஅதே இடத்தை வேறொரு நபர் மூலம் அவரிடம் இருந்து வாங்கி வேறு ஒருவருக்கு இன்னும் கூடுதலான விலைக்கு விற்பார்கள் இதைத்தான் பலர் தொழிலாகவே செய்து வருகிறார்கள்.வீராபுரம் திமுக பஞ்சாயத்து தலைவர் திவாகரன்.

இந்த நிலையில் வீராபுரத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திமுகவை சேர்ந்த திவாகர், வீராபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்,  வில்லிவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் தயாளன்,  பிரகாஷ், நாகராஜ், ராஜேஷ் ஆகியோர் விவசாய நிலங்களை வாங்கி அதற்கு சிஎம்டி அப்ரூவல் வாங்காமல் அதே போல பொது பயன்பாட்டிற்கு எந்தவித இடமும் விடாமல் சார்பதிவாளர்களை சரி செய்து அதாவது அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து இடங்களை பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.வீராபுரம் திமுக பஞ்சாயத்து தலைவர் திவாகரன்.

சார்பதிவாளர் உதயன், சார்பதிவாளர் சிவசங்கரன் போன்றவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு தான் போட்டுள்ள லே அவுட்டில் உள்ள குறைகளை நிலம் வாங்குபவர்களுக்கு சொல்லாமல் விற்பனை செய்வதுதான் இவர்களது கில்லாடித்தனம்.சப் ரிஜிஸ்டர் உதயன்.

இந்த உதயம் தான் இரண்டரை ஏக்கர் நிலத்தை அரசாங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்து கொடுத்த முதல் குற்றவாளி சட்டத்திற்கு விரோதமாக அனுமதியின்றி போடப்பட்ட மனை பிரிவு பத்திரத்திற்கு பிரிவு செய்யப்பட்டு மனைவாரியாக 10 நாட்களில் பட்டா வழங்கி இருக்கிறார் ஆவடி தாசில்தார். எந்த கவர்மெண்டாக இருந்தாலும் காசு கொடுத்தால் எல்லாம் இரண்டு நாட்களில் ரெடியாகிவிடும் அது பட்டாவாக இருந்தாலும் சரி பிறப்பு சான்றிதழ் ஆக இருந்தாலும் சரி சாதி சான்றது ஆக இருந்தாலும் சரி வாரிசு சான்றிழ்தாக இருந்தாலும் சரி உடனடியாக கிடைத்து விடும். திமுக ஒன்றிய செயலாளர் தயாளன்.

எத்தனை ரமணா படம் வந்தாலும் சரி கமல் நடித்த இந்தியன் தாத்தா படம் வந்தாலும் சரி அதிகாரிகள் திருந்த மாட்டார்கள். அதிகாரிகள் திருந்த வேண்டும் என்றால் சம்பவ இடத்திலேயே அவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்பினால்தான் லஞ்சம் மொழியும் அரசுக்கு நல்ல பெயரும் ஏற்படும்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் மோரை, வீராபுரம், பங்காரம் பட்டு, கன்னியம்மன் நகர், புலிகுத்தி, தேனம்பாக்கம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் யார் லேஅவுட் போட்டாலும் தங்களது விவசாய நிலத்தை விற்க விரும்புகிறவர்கள் சர்வேயர் கோபியை நாடுவார்கள்.ராஜேஷ் பாபு.

இவர் தான் அது தொடர்பான அனைத்து பிராடு வேலைகளையும் செய்து தருவார்.  அதாவது தாசில்தார் கையெழுத்து, விஏஓ கையெழுத்து, ஆர்ஐ கையெழுத்து,  ஸ்டாம்ப் முத்திரை அனைத்தையும் அவரே தயாராக வைத்துக் கொண்டு எல்லாவிதமான வேலைகளையும் செய்து முடிப்பார். கோபி சர்வேயர்.

ஏன் ஒரு அதிகாரியின் கையெழுத்தை ஒரு முறை பார்த்து விட்டால் கோபி சர்வேயர் அப்படியே போடும் திறமையுள்ளவர். பல அதிகாரிகளின் கையெழுத்தை பல ஆவணங்களில் போட்டுள்ளார்.  குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த ஆர்டிஓ ஆவடி தாசில்தார் டிஆர்ஓ கலெக்டர்களின் கையெழுத்தை பல ஆவணங்களில் எவரெ கையெழுத்து போட்டு தயாரித்து கொடுத்துள்ளார்.  இதன் மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துள்ளார். எனவே மோரை வீராபுரம் பகுதிகளில் திவாகரன், வெங்கடேசன் திமுக, வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் தயாளன், கிருபாகரன் ஆகியோர் போட்ட லேஅவுட்டுகளில் அனைத்து பிராடுத்தனங்களையும் செய்து கொடுத்தவர். இந்த சர்வேயர் கோபி தான்.வெங்கடேசன்.

எனவே மோரை, வீராபுரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேஅவுட் போட்டது சார்பாக அனைத்து லேஅவுட் தொடர்பான ஆவணங்களையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்கின்றனர் ஆவடி பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள்.

இதையும் படிங்க.!