பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ஆவடி பத்திரப்பதிவு அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் பல்வேறு முறைகேடுகளும் பொதுமக்களுக்கும் அலுவலர்களுக்கும் வசதிகளை கொண்ட கட்டிடமாக அது கட்டப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வைரலாகி வருகிறது.
அரசு துறைக்கு சொந்தமான சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் என்பதால் அலட்சியம் காட்டபடுகிறதா..? குறைகளை அரசு சரி செய்து தரவேண்டும் என்கின்றனர்.
பத்திரபதிவு துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ். ஐஏஎஸ்
தமிழக அரசு விசாரணைக்கு உத்திரவி ட வேண்டும்
1-வரைபடம் தயாரித்தவருக்கு தகுதி உள்ளதா..?
2-வரைபட அனுமதி எவ்வாறு கொடுக்கபட்டது.
3- நான்கு பக்க எல்லைக்கு தீர்வு கிடைக்காதபோது கட்டிட பணி துவங்கியது எப்படி?
4- ரூ 1.68 கோடி இக்கட்டித்திற்க்கு செலவு செய்யபட்டுள்ளதா..?
5-முதியோர் ,உடல் ஊனமுற்றவர்கள் அலுவலத்திற்க்கு வர முடியுமா..?
6-நுழைவு வாயில் அமைந்துள்ள குறுகிய பகுதி என்தால் காற்று ,வெளிச்சம் கிடைக்க வாய்ப்புயில்லை.இடநெருக்கடி ஏற்பட்டு மக்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்புபேற்பது
7- வடக்கு,தெற்கு சாலைகள் உள்ளபோது மேற்கு பக்கம் நுழைவு வாயில் அமைத்தது ஏன்
8- தினசரி 700முதல் 800பேர்வரை வந்தசெல்லும் இந்த அலுவலகம் பாதுகாப்பான முறையில் கட்டபட்டுள்ளதா.?
உடல் ஊனமுற்றவர்களுக்கான அமைப்பு பாதை
எனவே கட்டித்தின் தரம், அமைப்பு காற்றேட்ட வசதி போதிய வெளிச்சம் கிடைக்குமா என்பது குறித்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி அடிப்படை வசதிகள் நிறைவேற்றபட்டுள்ளதா என்பதை குறித்து அரசு விசாரணை நடத்தி மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் விசாரணையின் முடிவை தெரிவிக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
நான்கு பக்க எல்லையை உறுதிபடுத்த வேண்டும். அலுவலக நுழைவு வாயிலை மாற்றியமைக்கவும், மதில்சுவர் கேட்டின் அகலத்தை அதிகபடுத்தவும், “நுழைவு வாயிலின் இரண்டு பக்கமும் சாய்வுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்களின் சார்பில் கேட்டுகொள்கிறோம்.
லஞ்சம் வாங்குவதற்கு பெயர்போன வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ள இடத்திலேயே லஞ்சத்தை தவிர்க்க முடியாத பத்திரபதிவு அலுவலகத்தை கட்டியதே தவறு என்கின்றனர் சில சமூக ஆர்வலர்கள்.
அது தவிர காற்றோட்டமோ அல்லது இந்த கட்டடம் கட்டியதில் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்கவே இல்லை என்கின்றனர் வழக்கறிஞர்கள். கட்டிட வரைபடம் தயாரித்தது தவறு அது தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் பாதையை இன்னும் அங்கு ஏற்படுத்தவில்லை. நுழைவாயில் பகுதி குறுகியதாக இருக்கிறது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் பத்திரப்பதிவு எழுத்தர்கள் சங்கத்தினர் எனவே அரசு குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை சரி செய்து தர வேண்டும் இல்லை என்றால் கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு உடனே குறைகளை சரிசெய்து தரவேண்டும் . பத்திரபதிவு தலைவர் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர்.