புயல் மற்றும் வெள்ளம் மழைக்காலங்களில் பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது என்று ஆவடி தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஒத்திகை செய்து காட்டினர்.
ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் தீயணைப்பு துறை சார்பில் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தீயணைப்பு இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் , நிலைய அலுவலர் தமிழ்ச்செல்வன்ஆவடி அவர்கள் முன்னிலையில் தீயணைப்பு வீரர்களால் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இதில் ஆவடி வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நிர்வாக அலுவலர் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மழை புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சிக்கும் பொது மக்களை எப்படி காப்பாற்றுவது என்றும் வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்கள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்றும் ஒத்திகை பயிற்சி மூலம் தீயணைப்பு துறை வீரர்கள் செய்து காட்டினர்.
தீயணைப்பு வீரர் ஒருவர் படகில் சென்று ஏரியில் குதித்து எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்வது என்று செய்து காட்டினர்.
இதேபோல பொதுமக்களும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவது என்று எடுத்து கூறினார்கள்.