chennireporters.com

பொறியியல் மாணவரின் கடும் உழைப்பிற்கு கிடைத்த சன்மானம்.

ஹைதராபாத்தை சேர்ந்த ராபின் முகேஷ் என்பவர் கடந்த திங்கள்கிழமை இரவு சோமாட்டோ ஆப்பில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

அவர் ஆர்டர் செய்த அடுத்த 20 நிமிடத்திலேயே டெலிவரி பாய் உணவை கொண்டு வந்துள்ளார்.

அதுவும் அவர் சைக்கிளிலேயே 9 கி.மீ தொலைவை கடந்து வந்துள்ளார். இதனை கண்டு ராபின் முகேஷ் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த டெலிவரி பாயிடம் அவரை குறித்து விசாரித்துள்ளார். அப்பொழுது அவர் தனது பெயர் முகமது ஆஹில் எனவும், தான் ஒரு வருடமாக சோமாட்டோவில் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பொறியியல் கல்லூரியில் படித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு வியந்து போன ராபின் உடனே அவரை புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு இவரை கண்டால் தாராளமாக உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி அவருக்காக நிதி திரட்டவும் துவங்கியுள்ளார். இந்நிலையில் சுமார் 10 மணி நேரத்தில் 73 ஆயிரம் வரை நிதியுதவி கிடைத்த நிலையில் ராபின் 65,000 மதிப்புள்ள டிவிஎஸ் xl பைக் ஒன்றை ஆஹிலுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.

மேலும் மீதமுள்ள பணத்தை அவரது கல்லூரி கட்டணத்திற்காக கொடுத்துள்ளார். இதுகுறித்து புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் பலரும் அதற்கு வாழ்த்து கூறி வருகின்றனர் நாமும் வாழ்த்தலாமே..👍

இதையும் படிங்க.!