chennireporters.com

#Robbery; வழிப்பறிக் கொள்ளை.முந்திரி காட்டில் இளைஞன் என்கவுண்டரில் சுட்டு கொலை.

தமிழக காவல்துறை வரலாற்றில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இளம் சிறுவன் விஜய் என்கிற முட்டை விஜய் 19 வயதில் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தவறு செய்தால் போலீசார் நமக்கு துப்பாக்கி மூலம் நமக்கு சங்கு ஊதி விடுவார்கள் என்ற அச்சம் ரவுடிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி! – புதுச்சேரி ரௌடி கடலூரில் என்கவுண்டர் செய்த பின்னணி! - Vikatan

கடலூர் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், நேற்று இரவு பக்கத்து ஊரில் கூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நேற்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென வழிமறித்து தாக்கிய ஒரு மர்ம கும்பல், அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பிடுங்கிச் சென்றது. இந்த சம்பவம் குறித்து கடலூர் எஸ்.பி ஜெயக்குமாருக்கு திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் தகவல் தெரிவித்தனர்  அதையடுத்து கடலூர் போலீசார் அலர்ட் செய்யப்பட்டனர்.

தொடர் வழிப்பறி

இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த ஒரு மணி நேரத்தில், கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் பெரியப்பட்டு என்ற பகுதியில் பிரபு என்பவர் தன்னுடைய லாரியை நிறுத்திவிட்டு ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற வழிப்பறிக் கும்பல் அவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த பணத்தையும், செல்போனையும் கொள்ளையடித்துச் சென்றது. அடுத்த சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில், மணிமாறன் என்பவர் இயற்கை உபாதைக்காக லாரியை நிறுத்தியிருந்தார்.

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி; ரவுடி கும்பல் தலைவன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! | nakkheeran

அவரை சுற்றி வளைத்த அந்த வழிப்பறிக் கும்பல், அவரையும் தாக்கிவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழிப்பறி சம்பவங்கள் லாரி ஓட்டுநர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

19 வயது சிறுவன் என்கவுன்ட்டர்.

அப்போது அந்த வழிப்பறிக் கும்பல் எம்.புதூர் பகுதியிலுள்ள ஒரு முந்திரி காட்டுக்குள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து வழிப்பறிக் கும்பல்களை பிடிக்கும்படி கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதையடுத்து இன்று நேற்று காலை எம்.புதூர் காட்டுக்குள் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அடிபட்ட காவலர்களை நலம் விசாரிக்கும் எஸ்.பி ஜெயக்குமார்
காயமடைந்த காவலர்களை நலம் விசாரிக்கும் எஸ்.பி ஜெயக்குமார்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த வழிப்பறிக் கும்பல் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து போலீஸார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் புதுச்சேரியைச் சேர்ந்த ரௌடி `முட்டை’ விஜய் என்ற 19 வயது சிறுவன் கால் மற்றும் மார்பில் காயம் அடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து எஸ்.பி ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, “வழிப்பறி குற்றவாளிகளை எம்.புதூர் கிராமத்தில் போலீஸார் பிடிக்கச் சென்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த ரௌடி விஜய் என்பவர் போலீஸாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சித்தார். அதனால் போலீஸார் அவரை சுட்டுப் பிடித்தனர். விஜய் மீது புதுச்சேரியில் கொலை, கொள்ளை உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன” என்றார்.

புதுச்சேரி திலாஸ்பேட்டை வீமன் நகரைச் சேர்ந்தவர் விஜய் (எ) முட்டை விஜய்க்கு வயது 19 சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழிப்பறி வழக்கில் டி.நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் பிடிக்க முயற்சித்தபோது, இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு புதுச்சேரி சிறையில் இருந்து வெளிவந்தவன், கடலூரில் கைவரிசையை காட்டியபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கிறார்.

லாரியை மறித்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் : சுட்டுக் கொன்ற போலீசார்! - Tamil Janam TV

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஜய் என்கிற முட்டை விஜய்க்கு 19 வயது தான் ஆகிறது இளம் வயதிலேயே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் இவரது கூட்டாளிகள் நான்கு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த என்கவுண்டர் சம்பவத்தால் கடலூர் சிதம்பரம் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ரவுடிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க.!