chennireporters.com

முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பறிமுதல்.

வீரமணியின் வீடு

மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது.

முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே. சி. வீரமணி வீடு மற்றும் நண்பர்கள், உறவினர், வீடுகள், ஓட்டல் என 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

அதில் ரொக்கப் பணம் 34 லட்ச ரூபாயும் ஒரு கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் 5 கிலோ தங்கம், 47 கிராம் வைர நகை, 9 சொகுசு கார்கள்,ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உள்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மற்றும் ஆவணங்களை சோதனையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.34 லட்சம், 1.84 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கன் டாலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் பலவங்கிக் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!