வடசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இருப்பினும் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதனால் மருத்துவமனையில் போலீசார் தீவிர பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ரவுடியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் நாகேந்திரன் இவர் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது கடத்தல் என பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது.
இவர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு திடீரென நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் சொல்லுகிறார்கள். ஏற்கனவே நாகேந்திரனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.


அது தவிர அவருக்கு தீவிர சர்க்கரை வியாதி இருந்து வருகிறது. இதனால் அவர் உடல் மெலிந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக இவரது மகன் அஸ்வத்தாமன் மற்றோரு மகன் அஜித் ராஜா இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டான்லி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது சென்னை மாநகரில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் போலீஸ் கமிஷனர் அருண் போலீஸ் அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உஷார் படுத்தப்பட்டு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
