chennireporters.com

இந்தியன் வங்கியில் ரூபாய் 266 மோசடி. ரிசர்வ் வங்கிக்கு கடிதம்.

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 266 கோடி ரூபாய் மோசடி செய்த தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இந்தியன் வங்கி இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

செயல்படாத சொத்துக்கள் (non-performing Assets) கணக்கு தொடர்பாக 266 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த தகவலை இந்தியன் வங்கி ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மூன்று செயல்படாத சொத்துக்கள் தொடர்பாக இந்த மோசடி நடந்துள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

266 கோடி ரூபாய் மோசடி இழப்பை சந்தித்துள்ளது.செயல்படாத சொத்துக்கள் கணக்கு தொடர்பாக பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

(MP border check post development company limited) எம்பி. பார்டர் செக் போஸ்ட் டெவலப்மெண்ட்மெண்ட் கம்பெனி லிமிடெட் 166. 89 கோடி ரூபாய் கடன் தொகையை நிலுவையில் வைத்திருக்கிறது.

(Pune Solapur road development) புனே சோலாப்பூர் சாலை மேம்பாடு என்ற நிறுவனம் 72 .76 கோடி ரூபாய் நிலுவையையும் சோனாக் (Sonak company) நிறுவனம் 27.08 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பதாகவும் இந்தியன் வங்கி தெரிவித்திருக்கிறது.

இதுதவிர மார்ச் மாதத்திலும் இந்தியன் வங்கியில் 35 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள
தாகவும் ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று கணக்குகள் பற்றிய தகவலை கொடுத்து அவற்றை மோசடி கணக்குகள் என்று வங்கி கூறியிருக்கிறது.

இந்த மூன்று நிறுவனங்களைத் தவிர (S kumars nationwide limited) எஸ் குமார் நேஷன் வைட் லிமிடெட் , (Priya limited) பிரியா லிமிடெட் மற்றும் யுவராஜ் புரோடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 14.51 ரூபாய் 9. 73 கோடி ரூபாய் மற்றும் 11.5 கோடி ரூபாய் அளவிலான தொகையை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. என்றும் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க.!