chennireporters.com

யூடியூபர் மதன் வங்கி கணக்கில் ரூபாய் 4 கோடி பணம்.

யூ டியூபர் மதன் வங்கி கணக்கில் ரூபாய் 4 கோடி பணம். போலீஸ் அதிர்ச்சி..

ஆபாச பேச்சுக்களை யூடியூபில் மூலதனமாக வைத்து கோடிகளில் புரண்ட மதன் தருமபுரில் கைது செய்யப்பட்டார்.

அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்தி ஆபாச பேச்சுக்களுடன் யூடியூப்பில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தார்.

அந்த வீடியோ விளையாட்டுகளில் பெண்களை ஆபாசமாக பேசி வந்தார்.அவர் மீது பல புகார்கள் அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து அதன்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதனை போலீசார் தேடி வந்தனர்.

மதனை பிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது தொழில்நுட்ப ரீதியாக பல நுணுக்கங்களை தெரிந்த மதன் யாரிடமும் செல்போனில் கூட தொடர்பு கொள்ளலாமல் தலைமறைவாக இருந்தார்.

அதனால் அவரது ஐ.பி முகவரியை வைத்து தேடுவதில் போலீசார் சிரமப்பட்டனர்.மதன் பயன்படுத்திய பிரைவேட் நெட்வொர்க்கின் சர்வர்,அவர் அமெரிக்காவில் இருப்பது போலவும் ஆஸ்திரேலியாவில் இருப்பது போலவும் காண்பித்தது.

இதனையடுத்து மதனை பிடித்தே தீரவேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இறங்கி தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.

தொழில்நுட்ப ரீதியான தேடலை ஒருபுறம் நடத்திக்கொண்டிருந்த போலீசார் மதனின் மனைவி கிருத்திகாவை கை குழந்தையுடன் விசாரணைக்கு அழைத்து வந்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

மதனோடு ஆபாசமாக பேசுவது கிருத்திகா தான் என கண்டறிந்து கைது செய்தனர்.

தொடர்ந்து மதனின் தந்தையிடம் நடத்திய விசாரணையில்,மதனோடு அடிக்கடி தொடர்பில் இருக்கும் உறவினர்கள் நண்பர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்தனர்.

அதன்படி சேலத்தில் முகாமிட்டிருந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.அதன் மூலம் அவனது இருப்பிடங்களை கண்காணித்து வந்தனர்.

அதனால் மதன் தனது இருப்பிடத்தை மாற்றி கொண்டே இருந்தார்.

தன் கைகுழந்தையுடன் மனைவியும் தந்தையும் போலீசில் சிக்கி இருப்பதோடு நாம் இருக்கும் இடத்தை போலீசார் நெருங்கி விட்டார்கள்.

என உணர்ந்த மதன் ஒரு கட்டத்தில் தப்பியோடமல் தர்மபுரி மாவட்டம் மதிக்கோன் பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருக்கும் போது போலீசாரிடம் மதன் சிக்கினார்.

தன்னை சுற்றி வளைத்த போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த மதன் தனிப்படை போலீசாரின் காலில் விழுந்து அழுது புலம்பி இருக்கிறார்.

நீங்கள் நினைக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை.என்றும் ஆபாசமாக பேசியது அவ்வளவு பெரிய குற்றமா என கேட்டு தன்னை விட்டு விடும்படி காலில் விழுந்து புலம்பி இருக்கிறார்.

இதற்கிடையில் மதன் கிருத்திகா தம்பதி பெயரில் இருந்த வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

அவற்றில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரது மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மதன் சம்பாதிக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது போல் போலி வீடியோக்கள் மூலம் தகவல்களை பரப்பி அதன் மூலம் தன்னை பின் தொடரும் வசதி படைத்த விட்டு வாரிசுகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார்.

என்பதும் போலீசில் தெரிய வந்துள்ளது சட்டவிரோத பணத்தின் மூலம் வாங்கிய மதனின் 2 சொகுசு கார்கள் 3 லேப்டாப்புகள் மற்றும் ட்ரோன் கேமராவையும் பறிமுதல் செய்து போலீசார் அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.

மதனை சென்னைக்கு அழைத்து விசாரணை செய்தால் தான் பல உண்மைகள் தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.

இது தவிர மதன் சென்னை அம்பத்தூரில் ஓட்டல் நடத்தி ஹோட்டல் உரிமையாளருக்கு வாடகை பணம் தராமல் இருந்ததும் ஓட்டுநர் உரிமம் பயிற்சி நிலையம் நடத்தி அங்கு மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.

மதன் மீது பல அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.

அது தவிர மதனின் பெண் நண்பர்கள் மற்றும் அவர்களது செல்போன் நம்பர் களை வாங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதன் மாயாவி மன்மதன் தான்.

இதையும் படிங்க.!