தமிழக முதல்வரின் குடும்பம் மற்றும் அவரது மைத்துனர் பற்றி பல முக்கிய தகவல்களை கஞ்சா சங்கரிடம் பரிமாறிக் கொண்ட தின்டிவனம் ஆர்டிஓ முக்கண்ணன் பற்றி தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதம் தற்போது முதல்வர் வீட்டில் கிச்சன் கேபினட் வரை சென்றுள்ளதாக தலைமைச் செயலக உளவுத்துறை அதிகாரிகள் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணியாற்றுபவர் முக்கண்ணன் இவர் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம் போன்ற பகுதிகளில் பணியாற்றி இருக்கிறார்.
கஞ்சா சங்கர்
டிசிஆர் மற்றும் பி எஸ் 4 என மத்திய அரசு தடை செய்த வாகனங்களை டீலர்கள் விரைவில் அந்த வண்டிகளை விற்பனை செய்து அதற்கு பதிவும் செய்து தர தயாராக இருக்கிறேன் என்று பல டீலர்களிடம் வியபாரம் பேசி பல லட்சம் ரூபாய் வசூல் செய்து கொள்ளையடித்திருக்கிறார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன். ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் பொழுது பல கோடி ரூபாய் வரை இவர் இப்படி முறைகேடாக சம்பாதித்துள்ளார் என்று பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகார்கள் மீது அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம் ஆர் விஜயபாஸ்கரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் மாதம் அவருக்கு பெரும் தொகையை லஞ்சமாக கொடுத்து தன்னை நேர்மையானவர் என்றும் விசுவாசி என்றும் தன் பதவியை காப்பாற்றிக் கொண்டுள்ளார் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
தமிழ்நாடு முழுவதும் பல முக்கிய துறைகளில் மட்டுமல்லாமல் தனது துரையில் உள்ள அதிகாரிகளுக்கு பணிமாற்றம் செய்து தருவது அவர்கள் விரும்பும் பதவியை வாங்கித் தருவது அது மட்டும் இல்லாமல் தனது துறையில் அதிகாரிகளுக்கு எந்தெந்த மாவட்டத்தில் பணி வேண்டுமே அதை எல்லாம் ஏற்பாடு செய்து தந்து அமைச்சர் எம் ஆர் பாஸ்கரை சரிகட்டி பல லட்சம் ரூபாய் அதில் கல்லா கட்டியிருக்கிறார் இந்த முக்கண்ணன்.
RTO முக்கண்ணன்.
இந்த நிலையில் திண்டிவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் பல லட்ச ரூபாய் கொள்ளையடித்து சொத்து சேர்த்திருக்கும் முக்கண்ணன் பற்றி சவுக்கு சங்கர் ஒரே ஒரு ட்வீட் போட்டு ஆர்டிஓ முக்கண்னனை மிரட்டி இருக்கிறார். சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக உறக்கப் பேசும் பெரும் பத்திரிகையாளர் என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பல அதிகாரிகளை மிரட்டி பணம் சம்பாதித்த சவுக்கு சங்கர் தனது உச்சபட்ச போதையில் காக்கா உட்கார பணம் பழம் விழுந்த கதையாக முக்கண்ணனுக்கு எதிராக ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார். உடனே அதை பார்த்த முக்கண்ணன் பயந்து இரண்டு நாட்களில் ஒரு வாரத்தில் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை கஞ்சா சங்கருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் என்கிறார் சவுக்கு சங்கர் அல்வலக ஊழியர்கள்.
கஞ்சா சங்கர்.
இதுகுறித்து காவல்துறையில் உளவுத்துறையில் இருக்கும் கஞ்சா சங்கருக்கு எதிரான அதிகாரிகள் ஆர்டிஓ முக்கண்ணனுக்கு எதிராக ஒரு நோட்டு போட்டு ஐஜி உளவுத்துறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அவர் பார்வைக்கு படாமல் அந்த நோட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேனியில் பப்பிஸ் லாட்ஜில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் பற்றி பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் திண்டிவனத்தை சேர்ந்த வட்டார போக்குவரத்து அதிகாரி முக்கண்ணன் என்பவர் பிஎம்டபிள்யூ காரை சவுக்கு சங்கருக்கு பரிசாக அளித்து இருப்பதாகவும் அவர் தனது பெண் தோழிகளுடன் உல்லாசமாக இருக்க கிண்டியில் உள்ள ஐடி சோழ ஹோட்டலில் வந்து தங்கி ஓய்வெடுக்கும் சமயங்களில் சவுக்கு சங்கரை நேரில் சந்தித்து தமிழக அரசு மற்றும் முதல்வர் அவரது மருமகன் அவரது மகன் பற்றி பல ரகசிய தகவல்களை கஞ்சா சங்கருக்கு கூறியிருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.
இதன் அடிப்படையில் தான் தமிழக போக்குவரத்து துறை மற்றும் தமிழக அரசு பற்றி தமிழக டாஸ்மாக் துறை பற்றியும் பல செய்திகளை அரசுக்கு எதிராக சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்படுகிறது. இவை அனைத்து தகவல்களையும் திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் கொடுத்ததாக சொல்கிறார்கள் சவுக்கு சங்கரின் நண்பர்கள்.கஞ்சா சங்கர்.
இதுகுறித்து நாம் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் கருத்தை அறிய முயன்றோம். ஆனால் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இந்த புகார் குறித்து வாட்ஸ் அப்பில் அவருக்கு நாம் 10 கேள்விகளை முன் வைத்தோம். இரண்டு நாட்கள் கழித்து அவர் நீங்கள் சொல்லும் அனைத்து குற்றச்சாட்டுகளும் நான் மறுக்கிறேன். அதுபோன்று நான் எதுவும் அவருக்கே செய்யவில்லை. அந்த புகாரில் எந்த அடிப்படை உண்மையையும் இல்லை. நான் திண்டிவனம் சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறேன் என்று தனது பதிலை வாட்ஸ் அப்பில் தெரிவித்து இருந்தார். சவுக்கு சங்கருக்கு bmw கார் வாங்கி கொடுத்தது பற்றி நாம் கேட்டதற்கு அதற்கு ஏதும் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.
ஆர்டிஓ முக்கண்ணன் நமக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய பதில்.
இவர் அதிமுக அனுதாபி என்றும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம் ஆர் விஜய பாஸ்கர் மற்றும் சில முக்கிய விஐபிகள் தொடர்பிலிருந்து அதிமுக ஆட்சி காலத்தில் கோலோட்சி இருந்தார் என்று சொல்கிறார்கள். இவர் திமுக அரசுக்கு எதிராகத்தான் பணியாற்றி வருகிறார். இவர் மீது எந்த விதமான ஒழுங்கின் நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்க தயங்குகிறது என்கின்றனர் அவரது அலுவலக ஊழியர்கள் இது தவிர பெண்கள் விஷயத்தில் மிக மோசமான நபராக நடந்து கொள்ளும் முக்கண்ணன் பற்றி நமது அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் என்கிற பெயரில் ஒரு புகார் கடிதம் வந்துள்ளது.
அந்த புகார் கடிதத்தில் தன்னுடைய பெயரை சொல்லாமல் நான் அவரை நம்பி என் வாழ்க்கையை தொலைத்தேன் என்னை சூறையாடி என் வாழ்க்கையையே அழித்து விட்டார். என்பதை நான் வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். சொன்னால் என் உயிருக்கு ஆபத்து. சவுக்கு சங்கரிடம் சொல்லி உன் வாழ்க்கையை அழித்து விடுவேன் என்று முக்கண்ணன் மிரட்டுகிறார் என்று ஒரு புகார் கடிதம் வந்துள்ளது.
இந்த புகார் கடிதம் குறித்து திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் அவரது தரப்பை விளக்கத்தை அளித்தால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். தமிழக அரசு பற்றி முதல்வர் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் பல ரகசிய தகவல்களை சவுக்கு சங்கருக்கு தெரிவித்த ஆர்டிஓ முக்கண்ணன் மீது அரசு துரிதமான நடவடிக்கை எடுத்து எடுக்க வேண்டும் என்கின்றனர் உடன்பிறப்புகள் சிலர் உடனடியாக செய்வாரா? முதல்வர் ஸ்டாலின் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
RTO முக்கண்ணன்.
முக்கண்ணன் வைத்துள்ள மூன்று சிம் கார்டுகளின் கால் ரெக்காடுகளையும் சவுக்கு சங்கர் வைத்துள்ள அனைத்து சிம் கார்டுகள் மற்றும் மாலதி பெயரில் வாங்கி பயன்படுத்தும் சிம்கார்டுகளின் ரெக்கார்டுகளை ஆய்வு செய்தால் முக்கண்ணனுக்கும் சவுக்கு சங்கரும் பேசிய தகவல்கள் வாட்ஸ் அப் காலில் பேசிய ஆதாரங்கள் வெளியாகும் என்கின்றனர் சவுக்கு அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலகங்கள்.