அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுக வின் பொன் விழா கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கிறது.
அதற்கு முந்தைய நாளான 16ஆம் தேதி சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்ளுக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதனை தொடர்ந்து தொண்டர்களை சந்திக்கும் சசிகலா தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இம்மாதம் 16ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா மறுநாள் 17ஆம் தேதி காலை சென்னை தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கும் அதனைத்தொடர்ந்து ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் செல்லதிட்டமிட்டிருக்கிறார்.
அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் சசிகலா தீவிர சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை சந்திக்க ஆதரவு திரட்ட இருப்பதாக கூறப்படுகிறது.சசிகலாவின் இந்த முடிவால் அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என தெரிகிறது.