chennireporters.com

ஐந்து ஆண்டுகள் கழித்து போயஸ் கார்டனில் நுழைந்த சசிகலா.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து சசிகலா வெளியேறினார்.அதன் பிறகு எடப்பாடி அரசு ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசுடைமை ஆக்கியது.

அதிலிருந்து சசிகலா போயஸ் கார்டன் பக்கம் போனதே இல்லை.இந்த நிலையில் திடீரென்று சசிகலா போயஸ் கார்டனுக்கு சென்றார்.ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை பார்ப்பதற்காக அல்ல .

நடிகர் ரஜினிகாந்தை பார்க்க போயஸ் கார்டன் சென்றார் சசிகலா.நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து அவரது உடல் நலத்தை கேட்டறிந்தார்.சிறையில் இருந்து விடுதலையான பிறகு சசிகலாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது சசிகலாவின் உடல்நலம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.சென்னை திரும்பிய சசிகலாவை பலர் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்துக்கும் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேரில் சென்ற சசிகலா அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து சசிகலா வாழ்த்து தெரிவித்தார்.ரஜினி சசிகலா இருவரும் அரை மணி நேரத்திற்கு மேலாக தனியாக சந்தித்து பேசியதாக போயஸ் கார்டன் வட்டாரம் தெரிவிக்கிறது.

ரஜினிகாந்த் பிஜேபி அரசாங்கத்திற்கு நெருக்கமானவராக கருதப்படும் நபர் இவர் மூலம் சசிகலா எடப்பாடி ஓபிஎஸ் கூட்டத்திற்கு எதிராக அரசியல் காய் நகர்த்த முடிவு செய்திருப்பதாக  அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.

இதனால் இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டம் சற்று குழம்பிய மனநிலையில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.விரைவில் ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் யாராவது ஒருவர் டெல்லி செல்லலாம் என்று அதிமுக தலைமை வட்டாரம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க.!