chennireporters.com

என்னை காப்பாற்றுங்கள் அபயக்குரல் விடுக்கும் தமிழர்.

துபாயில் வேலைக்கு அழைத்துச் சென்று தமிழர்களை கொடுமை படுத்தும் செயல் தொடர்ந்து பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சவுதி அரேபிய தொழிலதிபர்கள் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன் உயிரை காப்பாற்றுமாறு வாட்ஸப்பில் வீடியோ பதிவில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பனை குளத்தை சேர்ந்த காதர்மொய்தீன் என்பவரை சவுதி அரேபியாவுக்கு சமையல் வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது என்று சொல்லி டூரிஸ்ட் விசாவில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சமையல் வேலை வழங்காமல் ஒட்டகம் மேய்க்கும் வேலையை செய்ய சொல்லி அடித்து துன்புறுத்துவதாக அவர் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு அவரை உயிருடன் அனுப்ப மாட்டோம் என்றும் சவுதி அரேபியா விலேயே கொலை செய்து விடுவதாகவும் அவர் தனது வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை உயிருடன் மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் துபாய் தமிழர்கள் நலச்சங்கம்.

இதையும் படிங்க.!