கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சுவாமி சித்பாவானந்தா மெட்ரிக்குலேசன் என்ற தனியார் பள்ளி ஒன்றில் பூப்பெய்திய பட்டியலின மாணவியை பள்ளியின் வாசலில் உள்ள படியில் உட்கார வைத்து தேர்வு எழுதிய சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருவதுடன் அவரை ஆபாசமாக திட்டி கடுமையாக எச்சரித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.நெட்டிசன்கள் பதிவு செய்த பதிலைத்தான் நாம் அப்படியே பதிவு செய்கிறோம்.
நாளைக்கு அந்தப் பொண்ணு படிச்சு பெரிய அதிகாரியா வந்தா அப்ப என்னடா பண்ணுவீங்க? நீங்க கீழ தான்டா உட்காரனும் அப்படி என்று தொடங்கும் கமெண்டில் இருந்து சொல்ல முடியாத வார்த்தைகளை பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர். அது தவிர்த்து பள்ளியில் உள்ள மொத்த பேரும் செருப்பு எடுத்துட்டு போயி அந்த நாயை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் இதற்கு தான் நீங்கள் டீச்சர் ஆனீங்களா கொஞ்சம் கூட அறிவில்லையா உனக்கு உன் பொண்ணு இருந்தா இப்படித்தான் செய்வியா என்ற கேள்வியும் பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் அந்த கல்வி நிறுவனத்தின் மானம் மரியாதை காற்றில் பறக்கிறது என்றும் கேவலமான அருவருக்கத்தக்க செயல் என்றும் கொடிது, கொடிது தீண்டாமை கொடியது என்றும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தலைமை ஆசிரியர் மீது என்கிற பதிலை பதிவு செய்து வருகினறனர்.
கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்.
கல்வி முறை மிகவும் கேவலமாக தனியார் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்கின்றனர், திமுக, அதிமுக, பாஜக, தாவெகா, காங்கிரஸ் இன்னும் எத்தனை அரசியல் கட்சிகள் வந்தாலும் சாதிய கொடுமையை தீராது, ச்சீ த்தூ த்தூ என்று ஒருவர் பதிவு செய்து இருக்கிறார். இந்த பிஞ்சு மனசு ஏண்டா நஞ்ச கலக்குறீங்க படிச்ச தற்குறி நாய்களே என்றும் ஒரு பதில் பதிவு செய்து பட்டிருக்கிறது. யாராவது இந்த விஷயத்திற்கு முட்டுக் கொடுக்க வந்தால் செருப்பு பிஞ்சிவிடும் என்ற கமெண்ட்டும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
முதலமைச்சர்.
எனவே தமிழக அரசு அல்லது தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் நீதிமன்றம் தாமாக முன்வந்து சுவாமி சித்பாவானந்தா மெட்ரிக்குலேசன் சுவாமி சித்பாவானந்தா மெட்ரிக்குலேசன் சுவாமி சித்பாவானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளியின் மீது வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரை ரோட்டில் தரதரவென்று இழுத்துச் சென்று கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
மகளிர் ஆணையம் உடனடியாக அந்த தலைமை ஆசிரியர் ஆனந்தி மீதும் சுவாமி சித்பாவானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளியின் மீதும் வழக்கு தொடர வேண்டும்.
கோயமுத்தூரில் பள்ளி மாணவி தேர் எழுதிய விஷயத்தில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிக்கு நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளார். அது தவிர அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.