மதுரை மாவட்டம் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்டது மன்னார் கோட்டை கிராமம்.இந்த கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது சித்தப்பா பால்பாண்டி என்பவருக்கு நில தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் ரவிக்குமாருக்கும் பால்பாண்டிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது மது போதையில் இருந்த ரவி அவரது சித்தப்பா பால்பாண்டியை அடித்து உதைத்தார்.மேலும் அரிவாளால் வெட்ட முயன்றார்.உடனே பால்பாண்டி வச்ச காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதை அடுத்து அந்த புகாரை விசாரிக்க தலைமை காவலர் முருகன் மன்னார் கோட்டை கிராமத்திற்கு சென்றார்.
அப்போது மது போதையில் இருந்த ரவி நீ என்ன பால் பாண்டிக்கு சப்போர்ட்டா பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறாயா என்று ஏட்டையாவை அவதூறாக பேசி தான் வைத்திருந்த அரிவாளால் ஏட்டு முருகனின் இடது கையை வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த பலத்த காயமடைந்த தலைமை காவலர் முருகன் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.போலீசாரை வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.