கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் பாத்ரூமில் செல்போனை வைத்து வீடியோ பதிவு செய்ததாக திமுக பிரமுகர் காவல் நிலையத்தில் புகார்.
வளசரவாக்கத்தைச் சேர்ந்த பாரதி என்பவர் மதுரவாயல் தொகுதி மகளிரணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.
இவர் கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் இன்று மதியம் சாப்பிட சென்றதாகவும் அப்போது பாத்ரூம் சென்ற பொழுது அங்கு அட்டை பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட செல்போனில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் செல்போனை பறிமுதல் செய்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாத்ரூமில் செல்போன் கேமரா வைத்ததாக கூறப்படும் இளைஞரை கிண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.