ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றுபவர் செல்வகுமார்.
இவர் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை தொடர்ந்து சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அதில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக பணமும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் நகராட்சி பொறியாளர் செல்வகுமார்.
இவரது வீட்டில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.மதியழகன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
15 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் தங்கம் வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவர் ஏற்கனவே வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய போது அதிக அளவில் லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது.
செல்வகுமார் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூபாய் 23,32,770 பணமும், 193.75 கிராம் தங்க நகையும், 2.17கிலோ வெள்ளி பொருட்களும் கணக்கில் வராத 10,73,520 டி.டி.யும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அது தவிர திருவள்ளூர், ராணிப்பேட்டை, காட்பாடி, ஆகிய பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களும் கட்டிடங்களும் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
செல்வகுமார் வீட்டில் நடைபெற்ற சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.