பாலியல் தொல்லை; மேலும் ஒரு ஆசிரியர் மீது மாணவி புகார் !!

May 26, 2021

By தேவா பூபதி

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது, சமூக வலைதளம் மூலம் மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இது குறித்து அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடமும் புகார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான குற்றச்சாட்டின் மூலம் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு பள்ளி ஆசிரியர் மீதும் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர இந்த மாணவியை போல வேறு ஏதாவது பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று போலீசார் தீவிரமாக தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

Share:

தேவா பூபதி

May 26, 2021

Leave a Comment