chennireporters.com

கொரோனா நிவாரண நிதிக்கு ஐந்து கோடி ரூபாய் தந்து அசத்திய சக்தி மசாலா நிறுவனம்.

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை தரும் ஒரே நிறுவனம் தந்துகொண்டிருக்கும் நிறுவனம் சக்தி மசாலா நிறுவனம் மட்டும்தான் அதன் உரிமையாளர் பிசி துரைசாமி இந்த கொரோனா காலத்திலும் வேலை இல்லாத நாட்களிலும் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் தந்து கொண்டிருக்கிறார்.

அது தவிர பல சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு புதிதாக பதவியேற்றுள்ள தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கொரோனா காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

துரைசாமி

அதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் நிதி அளித்து வருகிறார்கள் பல முன்னணி நடிகர்களும் நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் சத்தமில்லாமல் முதலமைச்சரின் நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்காமல் கடந்த 15ஆம் தேதி வங்கி பரிவர்த்தனையில் முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் சக்தி மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் துரைசாமி.

அவர் எண்ணத்திற்கு ஏற்றார் போலவே அவரது மனைவி சாந்தி துரைசாமியும் தன்னுடைய நிறுவன ஊழியர்களுக்கும் ஏழை மக்களுக்கும் பல பொது சேவையை ஆற்றி வருகிறார்கள்.

குறைந்த அளவில் நிதி தருபவர்கள் முதலமைச்சரை சந்தித்து பெருமையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு நிதி வழங்கும் வேலையில் தமிழக முதல்வரை சந்திக்காமலேயே தாராள மனதுடன் ஐந்து கோடி ரூபாய் வழங்கி இருப்பது பெருமைக்குரிய செயலாகும்.

இதையும் படிங்க.!