இந்தியாவை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள செய்தி தற்போது வெளியாகி உள்ளன.
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர்கள் 600 பேர் ஒன்றிணைந்து ஐ.சி.ஐ.ஜே International consortium of investigative journalist (ICIJ) அமைப்பின் மூலம் உலகில் 90 நாடுகளில் உள்ள பெரும் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் போன்ற பெரும் பணக்காரர்களின் வெளிநாட்டு முதலீடுகளை ஆய்வு செய்தனர்.
வெளிநாடுகளில் பினாமி பெயர்களில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அதில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் சட்டத்திற்கு புறம்பான முதலீடாக கண்டறியப்பட்டுள்ளது என்பதை பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளது.உலகில் பல்வேறு முன்னணி பத்திரிகைகள் இந்த புலனாய்வில் ஈடுபட்டிருந்தனர்.புலனாய்வின் இறுதியில் ஏறக்குறைய 1கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் கிடைத்துள்ளது.
அந்த ஆவணங்களை வெளியிட்டிருக்கின்றனர்.இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் டெண்டுல்கர், தொழிலதிபர் அனில் அம்பானி, தொழிலதிபர் கிரண் மஜூம்தார் ஷா உட்பட உலகின் பல்வேறு வி.ஐ.பிகளின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் 300 பிரபலங்களின் பெயர்களில் வெளிநாட்டில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு அதில் முதலீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் அதில் வெளியிடப்பட்டுள்ளன.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் எப்படியும் அரசை ஏமாற்றி விட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்வது தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது.
அந்த எதார்த்தத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது பண்டோரா பேப்பர்.இந்த ஆவணங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் வழக்கம்போல அதன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி 18கும் மேற்பட்ட நிறுவனங்களை வெளிநாட்டில் தொடங்கி வைத்துள்ளார்.அனில் அம்பானிக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அதாவது 200பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வங்கிகளில் கடன் வைத்துள்ளார்.
லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நிகர சொத்து மதிப்பு பூஜ்யம் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சார்ந்த நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கடுமையான நஷ்டத்தை கடந்த காலங்களில் ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்திய பணக்காரர்கள் விஐபிகள் உலகில் பல்வேறு நாடுகளில் மொரிசியஸ், சுவிட்சர்லாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு நாடுகளில் முதலீட்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.http://instaPDF.in-pandora-papers-list-951%20(1).pdf
இந்தியாவில் தன்னுடைய சொத்து பூஜியம் ஆகிவிட்டது என்று பொய் சொல்லி வெளிநாடுகளில் வேறு நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்து வருகின்றனர்.அந்த முதலீடு கருப்புப் பணமாக சென்று மீண்டும் இந்தியாவிற்கு வெள்ளைப் பணமாக திரும்புகிறது.
பண்டோரா பேப்பர்ஸ் பட்டியல் – இந்திய பெயர்
- அனில் அம்பானி.
- சச்சின் டெண்டுல்கர்.
- நகை வியாபாரி நிரவ் மோடியின்.
- நிரா ராடியா.
- காக்ஸ் அண்ட் கிங்ஸ் அஜித் கேர்கர்.
- கிரண் மஜும்தார் ஷா.
- ஜாக்கி ஷெராஃப்.
- காந்தியின் குடும்ப நண்பர் சதீஷ் சர்மா.
பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள விவரங்களை விசாரிப்பதற்கு சி.பி.ஐ. தரப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்தக் குழு இந்த விவரங்களை ஆராய்ந்து தவறு எதுவும் நடைபெற்று இருந்தால் கடுமையாக நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெளிநாடுகளில் பதுக்கி உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் வேலையை மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.