chennireporters.com

#singer Izivani; கானா பாடகி இசைவாணி கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

கானா பாடகி இசைவாணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கானா பாடல்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு பாடல்களை பாடி வருவதாக கூறியுள்ளார். அதேபோல், 2019-ம் ஆண்டு ‘ஐ ஆம் ஸாரி அய்யப்பா’ பாடல்களை தான் பாடியதாகவும், அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாகவும், கடந்த இரண்டு நாட்களாக தனக்கு பல்வேறு எண்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறியுள்ளார்.

கொலை மிரட்டல் வருது'.. கானா பாடகி இசைவாணி சென்னை கமிஷனரிடம் பரபரப்பு புகார் ..!

மேலும் தன்னிடம் கேவலமாக பேசப்படுவதாகவும், சமூக விரோதிகள் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், நான்கு ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்டு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி பொது அமைதியை சீர்குலைக்க சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மட்டுமின்றி, சமூக விரோதிகளால் அச்சுறுத்தப்படுகின்ற அச்சத்திலும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கழுத்தில் சிலுவை அணிந்து ஐயப்பா பாடலா? இசைவாணியால் கொந்தளிக்கும் பக்தர்கள்

எனவே, தொலைபேசி மூலம் தொடர்ந்து கொலைமிரட்டல் விடுத்து வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மிரட்டல் வந்த எண்களைக் குறிப்பிட்டு தனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கானா பாடகி இசைவாணி புகார் அளித்துள்ளார்.

Pa Ranjith & Gana Isaivani: ஐயப்ப விரதம் குறித்து சர்ச்சை பாடல்; கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு எதிராக புகார்.! | 🎥 LatestLY தமிழ்

ஏற்கனவே கேரள அரசாங்கம் பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்று அரசாணை பிறப்பித்துள்ளது. அது தவிர உச்ச நீதிமன்றமும் பெண்களுக்கான நீதியையும் உரிமையும் பறிக்கப்படக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது இந்த நிலையில் திட்டமிட்டு இசைவாணி மீது பரப்பப்படும் இந்த குற்றச்சாட்டு திட்டமிட்டு சமூக ஒற்றுமையை சதி செய்து சீர்குலைக்க செய்யப்படும் சதி செயல் என்று சொல்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

இதையும் படிங்க.!