ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் மிரட்டி கட்டிங் கேட்ட சிட்டிங் திருப்போரூர் தொகுதி வி.சி.க எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி மீது தமிழக சபாநாயகர் அப்பாவு இடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைமை நடவடிக்கை எடுக்குமா என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
சென்னை ECR பகுதியில் Aerodon என்ற நிறுவனம் ஹெலிகாப்டர் joyrides சமீப காலமாக நடத்தி வருகிறது. . எந்த ஒரு நிறுவனம் இந்திய வான் பகுதியில் பறக்கும் முன் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் பறக்க முடியாது. .அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதியில் அதன் பதிவு எண் இருக்கும். 
அதை பார்த்து யார் வேண்டுமானாலும் அது எந்த வகை ஹெலிகாப்டர்,எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்ன விலை?,யார் அதன் உரிமையாளர் அல்லது யார் அதை தற்போது குத்தகைக்கு எடுத்து பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல்களை பெற முடியும். ஆனால் இது போன்ற அடிப்படை தகவல்களை பற்றி கூட தெரியாத திருப்போரூர் விசிக MLA – ம் தொலைக்காட்சிகளில் நீதி நேர்மை பற்றி பேசும் Dr.சர்மிளாவின் கணவருமான SS பாலாஜி மாமூல் கேட்டு தொந்தரவு செய்கிறார் என அந்த நிறுவன CEO புகார் அளித்துள்ளார்.
நான் ஒன்றும் Aerodon என்ற அந்த நிறுவனம் மக்களுக்கு சேவை புரிகிறது என்று வக்காலத்து வாங்கவில்லை.5 நிமிடங்களுக்கு 6000 ரூபாய் வாங்குவது மிகவும் அதிகம்தான். அதிக கட்டண கொள்ளை அடிக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.தினமும் ஒரு ஹெலிகாப்டரை வைத்து 10 லட்சம் நிகர லாபம் அந்த நிறுவனம் சம்பாதிக்க கூட வாய்ப்பிருக்கிறது. குறைந்த பட்சம் 15 நிமிடம் கடற்கரை மற்றும் சென்னையை சுற்றி பறந்து 8000 ரூபாய் வாங்கினால் சரியாக இருக்கும்.
இருந்தாலும் ஒரு முயற்சியை தமிழ்நாடு சுற்றுலா துறையுடன் இணைந்து முன்னெடுத்து எல்லா அனுமதியும் பெற்றாலும் லோக்கல் MLA – க்கு லாபத்தில் பங்கு அல்லது மாமூல் கொடுத்தால்தான் தொழில் செய்யமுடியும் என்றால், என் தெருவில் தொழில் நடத்த வேண்டும் என்றால் பணம் தா என்று டீ கடையில் மாமூல் கேட்கும் உள்ளூர் ரவுடிக்கும் இந்த MLA – வுக்கும் என்ன வித்தியாசம்? குற்றச்சாட்டு உண்மையானால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் இவருக்கு இனிமேல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது. Dr. Sarmila ,your husband is letting you down..
இந்த புகார் தொடர்பாக எஸ்.எஸ். பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார். ஆனால் அந்த விளக்கம் ஏற்றுக் கொள்வதாகவும் இல்லை மழுப்பலான விளக்கமாகவே இருந்தது.
எஸ்.எஸ். பாலாஜி பற்றி திருப்போரூர் தொகுதியில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. தனது சொந்த கட்சிக்காரர்களிடமே சாதி பாகுபாடை காட்டி கடுமையாக சாதிப் பெயர் சொல்லி திட்டி பேசி வருகிறார் என்கிறார்கள் சொந்த கட்சியினர்.
இவர் தான் கட்டிங் கேட்டு மிரட்டும் சிட்டிங் வி.சி.க. எம்.எல்.ஏ. பாலாஜி.
இவர் தலித் சமூகத்தை சார்ந்தவர் அல்ல. வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் ஆனால் தலிச் சமூகத்தை சார்ந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு திருமாவளவனுக்கு ஜால்ரா தட்டிக்கொண்டு அந்த சமுதாய மக்களையே கடுமையாக இழிவாக சாதிப் பெயர் சொல்லி திட்டி பேசி வருகிறார் என்கிறார்கள் சொந்த கட்சியினர். இது தொடர்பாக பல புகார்கள் எழுந்துள்ளது. அந்த புகார்களைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அனுப்பியும் கூட அவர் எந்த வித நடவடிக்கையும் எஸ்.எஸ். பாலாஜி மீது எடுக்கவில்லை என்கின்றனர் சொந்தக் கட்சியினர்.
ஒரு பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு சென்றவுடன் போலீஸ் அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் எஸ் எஸ் பாலாஜி அந்த நாய்க்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று கடுமையான குரலில் பேசி இருக்கிறார். திருப்போரூர் பகுதியில் உள்ள பல்வேறு கம்பெனிகளில் சவுடு திருடுவதற்கு ஆதரவாகவும் மண் திருடுபவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இவரது உறவினர்கள் பல கம்பெனிகளுக்கு மேன்பவர் மற்றும் கம்பெனிக்கு முக்கியமான பொருட்களை வழங்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி அனைத்து ஜாதிகளுக்குமான கட்சி என்று திருமாவளவன் சொல்லிக் கொண்டாலும் தனது உயிருக்கு உலை வைத்த வன்னிய சாதியை சேர்ந்த எஸ்எஸ் பாலாஜியை கட்சியில் சேர்த்து அவருக்கு எம்எல்ஏ சீட்டும் வழங்கி வெற்றி பெற வைத்து அழகு பார்த்தார் திருமாவளவன். தனது சொந்தக் கட்சி சொந்த சாதி மக்களுக்கு எதிராக எஸ் எஸ் பாலாஜி இயங்கி வருகிறார் செயல்பட்டு வருகிறார் என்கிற செய்தி திருமாவளவன் காதுக்கு சென்றதா இல்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறாரா காரணம் என்ன திருமாவளவன் பற்றிய பல ரகசிய தகவல்கள் என்னிடம் உள்ளது.
அவர் என்னை எதிர்க்க மாட்டார் என்னை கட்சியிலிருந்து விளக்கமாட்டார் எத்தனை புகார்கள் வந்தாலும் எனக்கு மீண்டும் தேர்தலில் நிற்க வாய்ப்பு தருவார் என்று மீசை முறுக்கியபடி பேசி வருகிறாராம் எஸ் எஸ் பாலாஜி. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் எஸ் எஸ் பாலாஜிக்கு சட்டமன்ற தேர்தலில் நிற்கும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகளின் முன்னணி தலைவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு குரல் எனத் தொடங்கியுள்ளது என்கின்றனர் விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
அப்படி இருந்தும் எஸ் எஸ் பாலாஜிக்கு திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு வழங்கினாள் எஸ் எஸ் பாலாஜி சொல்லுவதைப் போல திருமாவளவனின் பல ரகசியங்கள் எஸ் எஸ் பாலாஜியிடம் இருப்பது உறுதியாகிறது என்றே வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர் விசிக வை உளவு பார்க்கும் சில உளவுத்துறை அதிகாரிகள்.
இந்தப் புகார் தொடர்பாக சமூக வலைதளங்களில் எஸ் எஸ் பாலாஜி பற்றியும் அவரது மனைவி ஷர்மிளா பற்றியும் பல்வேறு கேவலமான பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பதிவுகள் தொடர்பாக நாம் எழுத முடியாத பேச முடியாத அளவிற்கு மிக மோசமாக இருக்கிறது. எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக எஸ் எஸ் பாலாஜியும் கட்சியின் தலைவர் திருமாவளவன் கமென்ட் பாக்ஸ்க்கு சென்று படித்து தெரிந்து கொள்ளலாம்.
சாதி வெறி பிடித்து அலையும் சாத்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருக்கு ஜால்ரா போட்டுக் கொண்டு ஆட்டம் போடும் எஸ் எஸ் பாலாஜியின் ஆட்டத்தை நிறுத்த வேண்டும் அல்லது ஓட்டத்தை நிறுத்த வேண்டும். எதையுமே நிறுத்தவில்லை என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர் தொகுதி மக்கள் சிறுத்தையின் போர்வையில் ஒளிந்து நிற்கும் பசு தோல் போர்த்திய போலி சிறுத்தை பாலாஜியின் வாலை வெட்டி, முட்டியை தட்டி, மூளையில் உட்கார வைத்து விடுவார்களாம். இது வாக்காளர்களின் மைண்ட் வாய்ஸ் என்கின்றனர் தொகுதி மக்கள். விசிக தலைவர் மீசையை முறுக்குவாரா அல்லது பாலாஜிக்கு கோவிந்தா போடுவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
