கன்னியாகுமரி மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற வேண்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனையோடு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் 10 தணிப்படைகள் அமைத்து கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை விற்கும் குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார்.
![]()
அதன் அடிப்படையில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டாக்டர் ஸ்டாலின் பெயர் சொன்னாலே அஞ்சி நடுங்கும் கஞ்சா விற்பனையாளர்கள்.
தமிழக அரசிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் வேலை செய்யாமல் இளைஞர்களின் எதிர்காலத்தையும் அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் சமூக விரோதிகளை வேரோடு அழிக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் போதை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
அந்த போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் ஐ.பி.எஸ் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் மட்டும் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
![]()
18 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆறு கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இந்த வடக்கில் தொடர்புடைய 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல 17 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 253 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை ஜீரோ என்கிற அளவில் குறைந்துள்ளது.


இதுகுறித்து மாவட்ட எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது போதை பொருட்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் தொடரும். போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றவாளிகள் மீது அதிரடி வேட்டை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதனால் பெட்டி கடைகள், முதல் பெரிய கடைகள் வரை குட்கா பொருட்கள் விற்பனை முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்ட எல்லை பகுதியில் கேரளவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
