chennireporters.com

#SP Stalin who knocked; விபச்சார புரோக்கரை தட்டி தூக்கிய எஸ்பி ஸ்டாலின்.

தமிழகத்தையே தனது விபச்சார வியாபாரத்தின் மூலம் பல போலிஸ் அதிகாரிகளை தன் கையில் வைத்துக் கொண்டு மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்த பிரபல போலி வக்கீலும் விபச்சார புரோக்கருமான விஜய் ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதால் இவரிடம் கைநீட்டி காசு வாங்கிய போலீஸ் அதிகாரிகள் மற்றும்  டுபாக்கூர் (மாமா) ரிப்போர்ட்டர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

எஸ்.பி. DR. ஸ்டாலின்.

சென்னை, மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோயில், கன்னியாகுமரி, பெங்களூர் ஆகிய பகுதிகளில் நாகர்கோயிலை சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவர் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம், சூதாட்டம் செய்து வருவதாக பல்வேறு புகார்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.  ஆனால் அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், பல்லடம், ஊட்டி போன்ற பகுதிகளில் ஒரு சில போலீஸ் உயரதிகாரிகளின் ஆசியுடன் விபச்சாரம் நடைபெற்று வருவதாக உயர் போலிஸ் அதிகாரிகளுக்கும், உளவுத்துறை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் மௌனமாக இருந்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குமரி மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கு தெரிந்த முகமான விஜய் ஆனந்த் அந்தப் பகுதியில் தனது விபச்சார வியாபாரத்தை கொடி கட்டி பறக்க செய்திருந்தார்.

விபச்சார புரோக்கர் மாமா விஜய் ஆனந்த்.

கோவை மாவட்டத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அப்போதைய கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்படி விஜய் ஆனந்திடம் நட்பு பாராட்டி அதன் மூலம் லாபம் அடைந்ததாக வெளிப்படையாகவே போலீசார் பேசி வந்தனர். அதன் அடிப்படையில் கோவை மாநகரத்தில் பெரிய அளவிற்கு விபச்சார வழக்குகள் பதிவு செய்யாமல் இருந்ததே அதற்கு சாட்சி. விஜய் ஆனந்தும் கைது செய்யப்படவில்ல

முன்னாள் கோவை மாவட்ட கமஷ்னர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்.

கோவை மாநகரத்தில் விபச்சார புரோக்கர் விஜய் ஆனந்திடம் பணம் வாங்காத போலீஸ் அதிகாரிகளே இல்லை பலர் (google pay) கூகுள் பே வில் பணம் வாங்கினார்கள் இது தெரிந்ததும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமாவாசை இருட்டில் சிக்கிய களவாணி போல இருந்தது கோவை மாநகர காவல் துறை. சென்னை ரிப்போர்ட்டர்ஸ் டாட் காம் இணையதளத்தில் அதைப் பற்றி விரிவாக எழுதியிருந்தோம் யார் யார் எவ்வளவு பணம் வாங்கி இருந்தார்கள் என்பதையும் நாம் அதில் பதிவு செய்திருந்தோம்

இந்த நிலையில் கோவை மாநகரத்தில் துணை ஆணையராக பணியாற்றி வந்த ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எஸ் பி ஆக மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணிக்கு சேர்ந்தவுடன் மசாஜ் சென்டர் பெயரில் நடைபெறும் விபச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒரு சிறப்பு படையை அமைத்தார் எஸ்.பி. ஸ்டாலின்.

அதன் படி விபச்சார தடுப்பு பிரிவு தனி படை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த தனிப்படைக்கு எஸ்.ஐ. திலீபன் தலைமை தாங்கினார். அவர் தலைமையில் கேரள மாநிலம் பாலக்காட்டில்  விபச்சாரம் செய்து வந்த விஜய் ஆனந்தை கைது செய்து அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

எஸ்.பி.DR. ஸ்டாலின்.

இது குறித்து போலீஸ் தரப்பில் நாம் விசாரித்த போது இந்த விஜய் ஆனந்த் குமரி மாவட்டம் இலந்தவிலை கிராமத்தை சேர்ந்தவர். இவர் தன்னை வழக்கறிஞர் என சொல்லிக்கொண்டு காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பணம் சம்பாதித்து வந்தார். ஆனால் இவர் வழக்கறிஞருக்கு படிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சுற்றுலாத்தலமான குமரி பகுதியில் விபச்சார தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் விபச்சார தொழிலை ஹைடெக் லெவலுக்கு கொண்டு செல்லும் விதமாக தனக்கு நெருக்கமான காவல் அதிகாரிகளை தன் கையில் வைத்துக் கொண்டு குமரி மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரத்தை நடத்தி வந்தார்.

விபச்சார புரோக்கர் மாமா விஜய் ஆனந்த்.

தனது கஸ்டமர்களாக மாற்ற ஒரு வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி அதில் 500க்கும் மேற்பட்டவர்களை தனது கஸ்டமர்களாக மாற்றினார். அந்த வாட்ஸ் அப் குழுவில் அழகிய இளம் பெண்கள் அரை நிர்வாணமாக நிற்கும் புகைப்படங்களை அனுப்பி பொதுமக்களை கவர்ந்தார். அதேபோல அரை நிர்வாண கோலத்தில் பெண்கள் மசாஜ் செய்யும் புகைப்படங்களும் அதில் பதிவேற்றம் செய்தார். இதை பார்த்த பல ஆண்கள் அந்த குழுவில் இணைந்து தங்களுடைய இன்பத்தை பரிமாறிக் கொண்டனர்.

ராஜமங்கலம், கொய்யா விலை பகுதியில் திருமணம் மண்டபம் ஒன்றை வாடகை எடுத்து அங்கு ரகசியமாக மசாஜ் சென்டர் நடத்திய நிலையில் உல்லாச அரசு அதிகாரி ஒருவரிடம் அதிக பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் பெரிதாக கேரளாவை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.பி. DR. ஸ்டாலின்.

அதேபோல் நாகர்கோயில் ராமன் புதூரில் பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களை உல்லாசத்தில் ஈடுபடுத்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களை வைத்து சுற்றுலா பயணிகளிடம் விபச்சாரத்தை நடத்தி வந்தார் விஜய் ஆனந்த். அதேபோல் வீடுகள், விடுதிகளில் சூதாட்டத்தையும் விபச்சாரத்தையும் ஒரு சேர நடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் தொழிலுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

விஜய் ஆனந்திடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் மூலம் சமீபத்தில் குமரி மாவட்டத்தில் பணிபுரிந்த சில காவல்துறை உயர் அதிகாரிகளின் செல்போன்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் ஆனந்த் மீது 25க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால் தனிப்படை அமைத்து அவரை கைது செய்திருக்கிறார் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின். இந்த விஜய் ஆனந்த் பற்றி ஏற்கனவே நாம் பல செய்திகளை நமது இணையதளத்தில் எழுதி இருக்கிறோம்.

எஸ்.பி. DR. ஸ்டாலின்.

இது குறித்து நாம் எஸ்பி ஸ்டாலின் அவர்களிடம் விசாரித்தோம். அப்போது அவர் விபச்சார வழக்கு மட்டுமல்ல பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் இந்த மாதிரி சம்பவம் இனி நடக்காது என்ற நிலை உருவாக்கப்படும் என உறுதி அளித்தார். பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது போன்று விபச்சாரத்தை தடுக்கவும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் அது பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என சொல்கிறார்கள் குமரி மாவட்ட சமூக ஆர்வலர்கள்

இந்த விஜய் ஆனந்த் கோயம்புத்தூர், சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் எழுதப் படிக்கத் தெரியாத டுபாக்கூர் பத்திரிகையாளர்களை தங்களது நிறுவனத்திற்கு மேலாளராக நியமித்து அந்த பகுதியில் உள்ள கான்ஸ்டபிள் முதல் உயர் அதிகாரிகளை வரை தங்களது மசாஜ் சென்டர்களுக்கு அழைத்து வந்து மசாஜ் செய்து அனுப்புவார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான அவர்களுக்கு பிடித்த மாதிரி உள்ள இளம் பெண்களையும் அவர்களின் ஆசைகளுக்கு இனங்க வைப்பது தான் இந்த டுபாக்கூர் பத்திரிகையாளர்களின் முழு நேர வேலை. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் இந்த விபச்சார தொழில் புரோக்கர் டுபாக்கூர் வக்கீல் விஜய் ஆனந்த் உடன் கூட்டணி சேர்ந்து கொண்டு பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்,

மேலும் சில பத்திரிகையாளர்களை கூலிப்படையினரை வைத்து கொலை செய்யும் நோக்கத்திலும் அவர்கள் இறங்கி  சில பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். கோயம்புத்தூரில் பணியாற்றிய பொழுது அவருடைய கைகள் கட்டப்பட்டிருந்தது என்பது தான் உண்மை.

எஸ்.பி. ஸ்டாலின் கன்னியாகுமரிக்குச் சென்றதும் தான் ஒரு சுதந்திர பறவையாக இந்த விஷயத்தில் செயல்பட்டு தமிழகத்தின் பெரும் ஃபிராடு விஐபி விபச்சார புரோக்கர் விஜய் ஆனந்தை கைது செய்திருப்பது பாராட்டுக்குரியது. தன்னுடைய ஆக்கப்பூர்வமான பணிகளை அதிரடியாக இறங்கி ஆடத் தொடங்கி இருக்கிறார் ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் என்றால் அது மிகையல்ல.. 

விஜய் ஆனந்தன் செல் ஃபோனை ஆய்வு செய்தால் கோவை மாவட்டத்தல் உள்ள டுபக்கூர் மாமா ரிப்போட்டர்கள் பலர் சிக்குவார்கள். அது தவிற யார், யருக்கு எவ்வளவு பணம் கூகுள் ஃபேவில் லஞ்சமாக அனுப்பினார்கள் என்று தெரிய வரும்.

கைது செய்யப்பட்டுள்ள விஜய் ஆனந்த் மீது குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்கின்றனர் கோயம்புத்தூர் பத்திரிகையாளர்கள்.

இதையும் படிங்க.!