எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டவர்கள் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொடுங்கையூர் சிட்கோ பிரதான சாலையில் எஸ்எஸ் பிரியாணி எனும் பிரபல உணவு விடுதி செயல்படுகிறது கடந்த 16ஆம் தேதி இங்கு பிரியாணி சாப்பிட்ட பலருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. சில தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பத்துக்கும் மேற்பட்டோர் தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 40க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கொடுங்கையூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .
மூன்று நாட்களுக்கு முன்பு அளித்த புகாரில் இதுவரை கொடுங்கையூர் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக புகார் கொடுத்தவர்களை அமைதி காக்கும் படியும் நடவடிக்கை எடுப்போம் பொறுத்திருங்கள் என்று மழுப்பலான பதிலை சொல்லியே அனுப்பிவிட்டார்கள். அது தவிற வழுக்கு மண்டையுடன் சம்பவ இடத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பொது மக்களை விரட்டி, விரட்டி துரத்தினார்.
இந்த நிலையில் சமூகத்தின் அவலங்களை உடனடியாக வெளிக் கொண்டு வரும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியை சேர்ந்த நிருபர்கள் சம்பந்தப்பட்ட பிரியாணி கடை உரிமையாளரை சந்தித்து அவரது தரப்பு விளக்கத்தை கேட்கும் கேட்டு கவர் வாங்கியதோடு சரி ஒருவரும் இது குறித்த எந்த செய்தியும் வெளியிடவில்லை. மேற்படி பிரியாணி நிறுவனமே எந்தெந்த பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்தனர். என்ற பட்டியலையும் கையில் வைத்துக் கொண்டே அந்த பேப்பரில் அந்த டிவியில் செய்தி வராது என்று தைரியமாக சொல்லி வருகின்றனர்.
வடசென்னை ஏரியா பத்திரிகையாளர்கள் டிவி நிருபர்கள் யாரும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தராமல் கெட்டுப்போன பிரியாணி விற்பனை செய்த எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி உரிமையாளரிடம் ஒவ்வொருவரும் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக கவராக பெற்றுக்கொண்டு கண் காது வாய் பொத்தி சென்றுவிட்டனர். என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்னும் பல மோசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளை சொல்லி பத்திரிகையாளர்களை திட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் நேற்று மதியம் உணவு விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தபோது எந்தவித பொருட்களும் இல்லை. சென்னையில் மற்ற கிளைகளில் இது போன்ற பாதிப்பு உள்ளனவா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் இந்த உணவு விடுதியின் மத்திய சமையல் கூட திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் இயங்கி வருகிறது.
அங்கு அந்தப் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள எஸ் எஸ் பிரியாணி கடையில் கடந்த 16ஆம் தேதி சாப்பிட்ட சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் இரண்டு நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பாதிப்பு நீடித்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நேற்று பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைகளில் தரமான கோழி இறைச்சிகளை பயன்படுத்துவது இல்லை என்கிற குற்றச்சாட்டை வைக்கின்றனர். பிரியாணி பிரியர்கள் பிரியாணியின் சுவையும் வாசமும் நன்றாக இருப்பதால் அதிக அளவில் அந்த கடையில் விற்பனை அதிகரித்து வருகிறது. பிரியாணியை பார்சலில் வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்று உடனடியாக சாப்பிடாமல் சிறிது நேரம் கழித்து சாப்பிட்டால் உணவில் நிறைய சுவை குறைபாடும் கோழி இறைச்சி கெட்டுப் போய் இருப்பதும் நன்றாக தெரிகிறது என்கின்றனர் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த செல்வி என்பவர்.
அது மட்டும் இல்லாமல் முதலில் 170 ரூபாய் இருந்த பிரியாணியின் விலை தற்போது 240 ரூபாயாக விலை ஏற்றும் செய்துவிட்டனர். பிரியாணியில் இயற்கை பொருட்களுக்கு மாறாக வேதிப்பொருட்கள் பலவற்றை அதிக அளவில் கலப்பதாக குறிப்பாக அஜினமோட்டோ கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதேபோல ஆம்பூர் பிரியாணி ஆற்காடு பிரியாணி ஹைதராபாத் பிரியாணி திண்டுக்கல் பிரியாணி தலப்பாகட்டு பிரியாணி சேலம் ஆர்ஆர் பிரியாணி செட்டிநாட்டு பிரியாணி என பிரியாணி பெயர் வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து கடைகளின் உள்ள பிரியாணிகளின் மாதிரிகளை சேகரித்து அந்த கடைகளின் பிரியாணி தரத்தை உறுதிப்படுத்திய பின்பே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்கின்றனர் பிரியாணி பிரியர்கள்.
கொடுங்கையூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மூன்று நாட்களாக காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும் உணவகம் சார்பாக ஊடக நிருபர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். என தகவல் கிடைத்துள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை உயிருக்கு போராடி வரும் வேளையிலும் கடமையை செய்யத் தவறிய காவல்துறையும் காசுக்கு விலை போன ஊடகத்துறையினரையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கழுவி கழுவி, ஊத்தி கமென்ட் அடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.