chennireporters.com

#strong opposition to family politics; குடும்ப அரசியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு. தள்ளாடும் திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக.

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் கட்சியில் சீனியராக இருப்பவர்களுக்கும் கட்சியில் உழைத்தவர்களுக்கும் பதவி வழங்க வேண்டும் என்று அண்மைக்காலமாக திமுகவில் ஒரு பேச்சு எழுந்து வருகிறது.CM Stalin reaffirms to transform Tamil Nadu into industrial front-runner

தமிழகத்தின் பல பகுதிகளில் அமைச்சர்கள் மாவட்ட செயலாளராக இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு பதவி வழங்கி வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்தவர் புஜ்ஜிராமகிருஷ்ணன் இவரு உடல் நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.ஆவடி நாசரின் அமைச்சர் பதவி பறிப்பு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை..! - News18 தமிழ்

அமைச்சர் நாசர்.

இதனைத் தொடர்ந்து வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி காலியாக இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு வடக்கு ஒன்றியத்தின் மூத்த உறுப்பினராக உள்ள முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தென்னவன் இரண்டு முறை பஞ்சாயத்து தலைவராகவும் இரண்டு முறை கவுன்சிலராகவும் இருந்து தற்போது திருவள்ளூர் ஒன்றிய துணை சேர்மன் பதவி வகித்து வரும் பர்கத்துல்லாகான், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி உமா மகேஸ்வரன் ஆகியோர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

திருவள்ளூர் ஒன்றிய துனை சேர்மன் பர்கத்துல்லா.

அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஆவடி நாசர் தன்னுடைய ஆதரவாளரான இறந்து போன புஜ்ஜி ராமகிருஷ்ணனின் தம்பிக்கு பதவி வழங்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் கட்சிக்கு உழைத்தவர்கள் சிறிய வயது முதல் கட்சிக்காக பாடுபட்டவர்கள் பலர் இருக்கும் பொழுது ஒரே குடும்பத்தை சார்ந்த நபர்களுக்கு பதவி வழங்கக் கூடாது என்று ஒரு எதிர்ப்பு எழுந்து வருகிறது. புஜ்ஜி ராமகிருஷ்ணன் தம்பி என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு பதவி வழங்குவதை திமுக தொண்டர்கள் மூத்த நிர்வாகிகள் விரும்பவில்லை.

திமுக குடும்பக் கட்சியாக கிராமப்புறங்களிலும் மாறிவிடக் கூடாது உழைப்பவர்களுக்கும் கட்சியில் மூத்தவர்களுக்கும் பதவி வழங்க வேண்டும்  சிறப்பாக பணியாற்றுபவர்களை வைத்து கட்சி நடத்த வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் வடக்கு ஒன்றியத்தில் திமுகவை சிறந்த முறையில் நிர்வகிக்க தகுதியான ஆட்களை தலைமை நியமிக்க வேண்டும் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.

தென்னவன். திமுக மு.மா.கவுன்சிலர்.

மாவட்ட செயலாளர் குடும்ப அரசியலுக்கு ஆதரவாக செயல்படாமல் உழைப்பவர்களுக்கும் கட்சி மூத்த நிர்வாகிகளுக்கும் பதவி வழங்க வேண்டும் என்கின்றனர் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்.

இறந்து போன ஒன்றிய செயலாளர் புஜ்ஜிராமகிருஷ்ணனுக்கு ஒன்றியம் முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக ஒன்றியத்தில் விடப்படும் டென்டர்களுக்கு 30% சதவித கமிஷனும் வாங்கிக்கொண்டு அதையே தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு தான் பணிகளை கொடுத்து வந்தார்.  கட்சிக்காக பாடுபட்ட ஒருவருக்கு கூட ஒன்றிய செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன் எந்த உதவியும் செய்யவில்லை. குறிப்பாக ஜிஎஸ்டி வைத்துள்ள ஒப்பந்ததாரர் என்பதால் ஈக்காடு ஒன்றியத்தில் விடப்படும் அனைத்து வேலைகளும் இவரே டெண்டர் எடுத்து விடுவார். இவரே அதை கூடுதல் விலைக்கு மற்றவர்களுக்கு விற்று விடுவார்.

மறைந்த முன்னாள் வடக்கு ஒன்றிய செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன்.

அதன் பிறகு அவர்கள் செய்த வேலைக்கு முழுமையான பணத்தை தந்தது இல்லை என்று பல பஞ்சாயத்து தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் கட்சி தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளனர். அவர்களின் சாபமே மரணத்திற்கு பெரும் காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனர் உடன்பிறப்புகள் அதே குடும்பத்தை சேர்ந்த அவருடைய தம்பிக்கு மீண்டும் ஒன்றிய செயலாளர் பதவி வழங்குவது முறையாகாது என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். உண்மை நிலை என்ன என்பதை விசாரித்து கட்சியில் மூத்தவர்களுக்கும் திறமையாக செயல்படுபவர்களுக்கும் பதவிகள் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி உமா மகேஷ்வன்.

திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கட்சியின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மாவட்ட செயலாளர்  அல்லது கட்சியின்  தலைமை எடுக்கும் முடிவை மாவட்ட செயலாளர் நாசர் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவருக்கு கட்சி பதவி வழங்கக் கூடாது என்று கட்சியின் தலைவருக்கும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் அவர்களுக்கு வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த திமுக தொண்டர்கள் பலர் பல புகார்களை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை அமைச்சர் நாசர் ஏற்பாரா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. உழைத்தவர்களுக்கு பதவியா அல்லது ஜால்ரா தட்டும் ஆதரவாளர்களுக்கு பதவியா என்பதுதான் வடக்கு ஒன்றிய திமுகவில் பேசப்படும் ஹாட் டாபிக்காக உள்ளது.

இதையும் படிங்க.!