chennireporters.com

திருவள்ளூர் மாணவி கடிதம் அமைச்சர் திடீர் ஆய்வு.

a.magesh
ஆதிரை யுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சேர்ந்தவர் பாஸ்கரன் இவருடைய மகள் ஆதிரை முத்தரசி பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

ஆதிரை படிக்கும் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை.ஆதிரையின் அப்பா பாஸ்கரன் பள்ளியின் தலைமை ஆசிரியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.பள்ளி குறித்து விசாரித்தபோது பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.

அப்பள்ளிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பாஸ்கரன் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார்.

ஆனால் சரிவர பதில் இல்லை இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.அதன் அடிப்படையில் நீதிமன்றமும் பள்ளியின் நிலை குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டது.ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தனது பள்ளி தொடர்பாகஆதிரை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தான் படித்த பள்ளி குறித்து ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.

அதிகாரிகளுடன் கல்வியமைச்சர் அன்பில் மகேஷ்

அதை படித்த தமிழக முதல்வர் உடனடியாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை பொன்னேரியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து அமைச்சர் இன்று மதியம் ஆதிரை படித்த பள்ளியை ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆர்.டி.ஓ. செல்வம் மற்றும் அதிகாரிகள்உடனிருந்தனர்.பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர்.
பத்திரிகையாளரிடம் கூறுகையில் முதல்வருக்கு சிறுமி எழுதிய கடிதம் குறித்து புகார் மனுவை விசாரிக்க நேரில் வந்ததாக தெரிவித்தார்.குழந்தைகள் ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மன நிலையில் இருக்கிறார்.இந்த பள்ளியில் உள்ள பிரச்சினை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

மேலும் நீதிமன்றத்தின் வழி காட்டுதல் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பள்ளிக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடக்கூடாது என ஆதிரையின் தந்தை தெரிவித்ததாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடர் ஆய்வு நடத்தி பள்ளிகளுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு இருந்தால் அந்த நிலங்கள் மீட்கப்படும்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.பின்னர் கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு இது குறித்து முடிவு செய்யப்படும்.

மாணவர்களுடன் உடல்நலன் பாதிக்கக் கூடாது என்பதில் தமிழக முதல்வர் அக்கறை கொண்டுள்ளார்.பள்ளிக் கல்வித் துறை சார்ந்த 19 கோரிக்கைகளை வருங்காலங்களில் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

கோடைகால விடுமுறையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.ஒரு பள்ளி சிறுமி எழுதிய கடிதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்கின்றனர் பொது மக்கள்.

இந்த செய்தி சமூக வளை தலங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.

இதையும் படிங்க.!