செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே காவலர் குடியிப்பில் வசிக்கும் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் காவலர் குடியிப்பு உள்ளது.
இங்குள்ள அடுக்குமாடி குடியிப்பில் வசிப்பவர் கெளதமன் (வயது-59), தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணி செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பணிக்கு கிளம்பியபோது அவர் அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சப்இன்ஸ்பெக்டர் கெளதமன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவல் அறிந்த வந்த தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி கூறாய்வுகாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் குடும்பத்தினர், மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரனை செய்துவருகிறார்கள். மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்திரவடிவேல் நேரில் பார்வையிட்டு விசாரனை செய்தார்.
காவல் குடியிப்பில் வசில்கும் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவலர் குடியிப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் கௌதமின் மரணத்திற்கு உயரதிகாரிகள் காரணமா அல்லது பணிச்சுமையால் அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.