பத்திர பதிவுத்துறையில் லஞ்சம் வாங்காத அதிகாரிகள் யாருமே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அம்பத்தூர் சார் பதிவாளர் மாரியப்பன். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அம்பத்தூருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு வந்த மாரியப்பன் தான் பணம் வாங்காமல் எந்த பத்திரத்தையும் பதிவு செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பலமுறை பல புகார்கள் ஐஜி பத்திரப்பதிவுத்துறைக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் அம்பத்தூரில் உள்ள சில ஆவண எழுத்தர்கள்.
பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
அது தவிர அரசு அனுமதி பெறாத நிலங்களுக்கும் அரசு நிர்ணயித்த விலையை குறைத்தும் பல இடங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு செய்துள்ளார் மாரியப்பன்.
உதாரணத்துக்காக 1/1/ 2024 அன்று பத்திர எண் 979 / 2024 பத்திர எண்ணாக பதிவு செய்யப்பட்டுள்ள கோவில் பதாகை கிராமம் கிருபா நகர் மனைப்பிரிவில் மனை எண் 124 ஏ என்ற மனைக்கு விஸ்தீரணம் 2906 சதுர அடிகள் கொண்ட அனுமதி இல்லாத மனைக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்திர பதிவு செய்துள்ளார். மேலும் அந்த அன் அப்ரூவல் இல்லாத மனைக்கு பத்திரப்பதிவு செய்ததற்கு போலியான பேமென்ட் ஸ்லீப்பை அப்ரூவல் பெற்று அப்ரூவல் ஸ்கெட்ச் ஆர்டர் காப்பி இல்லாமல் 2007 ஆம் ஆண்டு போடப்பட்ட ரசீது என்னை வைத்து மேற்படி சொத்திற்கு முன் ஆவணம் வீட்டுமனைகளை பிரித்து விற்பனை செய்து விட்ட பிறகு அதன் காரணத்தினால் அந்த ஆவணம் 2015 ஆம் ஆண்டில் பேரிடரில் அழிந்து விட்டதாகவும் தவறான தகவல் என அளித்து சான்றிட்ட பத்திர நகலினை வைத்து முறைகேடாக மேற்சொன்ன பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பல பத்திரங்கள் போலியாக அங்கீகாரம் பெற்று ரசிதனை மட்டும் வைத்து முறைகேடாக லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திர பதிவு செய்துள்ளார் மாரியப்பன்.
அதேபோல அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் அரசு வழிகாட்டு மதிப்பை குறைத்து பல பத்திரங்களை பதிவு செய்துள்ளார் மாரியப்பன் உதாரணத்திற்கு அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் கிராமம் சிவானந்த நகர் வானகரம் ரோடுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு ஒரு சதுர அடிக்கு 6 ஆயிரம் ரூபாய் என்று இருக்கும் போது முந்தைய இரண்டு ஆவணங்களிலும் வானகரம் ரோடு என்று பதிவு செய்து இருக்கும்போது சிவானந்தா நகர் மட்டுமே எனக் குறிப்பிட்டு ரூபாய் 2000 திற்கு பதிவு செய்துள்ளார் பத்திர எண் 56 77 பார் 2024 இன் படி மேற்கொண்டு அரசுக்கு வருவாய் இழப்பு செய்திருக்கிறார் இதுபோன்று பல பத்திரங்களை பதிவு செய்துள்ளார் மாரியப்பன் 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை 12 லட்சம் ரூபாய் மதிப்பு என்று குறிப்பிட்டு இடத்தை பதிவு செய்துள்ளார் ஸ்டாம்ப் கட்டணம் மட்டும் 3 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ஆனால் அதை ஒரு லட்சத்து 8 என ஆயிரம் ரூபாய் கணக்கிட்டு பத்திர பதிவு செய்துள்ளார்.
புரோக்கர்களின் பிடியில் அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் சிக்கித் தவிக்கிறது என்கின்றனர் பொதுமக்கள் பதிவாளர் மாரியப்பன் தனக்கு வேண்டப்பட்ட மூன்று புரோக்கர்களை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பதையே தொழிலாக வைத்து வருகிறார் என்று பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ்க்கு பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.
மாரியப்பன் பதிவாளர்
புரோக்கர் அசோக் பாபு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஓய்வு பெற்ற அலுவலர் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரையும் வைத்துக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான பத்திரங்களையும் ஆவணங்கள் இல்லாத பல மனைகளை பணம் பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு செய்து வருகிறார் மாரியப்பன். அதேபோல முத்திரைத்தாள் விற்பனையாளரான சரவணன் அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்திலேயே தன்னுடைய அலுவலகமாக கருதி அரசு அலுவலர்களின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு தினமும் வேலை செய்து வருகிறார். அவரது உதவியாளர் பாலா மிகப்பெரிய புரோக்கராக செயல்பட்டு வருகிறார்
சரவணன்
மக்களிடமிருந்து லஞ்சப் பணத்தை வசூல் செய்து சார்பதிவாளர் மாரியப்பன் வீட்டுக்கோ அல்லது அவர் சொல்லும் இடத்திற்கோ கொண்டு செல்ல கொண்டு சென்று லஞ்ச பணத்தை கொடுக்கும் வேலை செய்து வருகிறார் பாலா.
இப்படி அரசு விதிமுறைகளை கடைபிடிக்காமல் அரசு ஊழியர் என்பதை மறந்து லஞ்சம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்ற நினைத்து பணியாற்று மாரியப்பன் மீது மாவட்ட பதிவாளரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இரண்டு முறை அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு திடீரென ஆய்வு செய்ய வந்துள்ளார்.
அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகம்
அப்போது சம்பந்தப்பட்ட பதிவாளர் மாரியப்பனை அழைத்து உங்கள் அலுவலகத்தின் மீதும் உங்கள் மீதும் பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கிறது இனிமேல் எந்தவிதமான புகார்களும் வராதபடி ஒழுங்காக பணியாற்ற வேண்டும் என்று எச்சரித்தும் கூட மாரியப்பன் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் மனம் போன போக்கில் பணியாற்றி வருகிறார். தனக்கு வேண்டப்பட்ட ஒரு பெண் டைப்பிஸ்டிடம் மாரியப்பன் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதாவது ஐஜி பத்திரப்பதிவு தன் பாக்கெட்டில் இருப்பதாகவும் தானும் அவரும் உறவினர்கள் என்றும் தன்னுடன் பணியாற்றும் அதிகாரிகளை மிரட்டி வருகிறார்.
பாலா
அடிக்கடி அந்தப் பெண் டைப்பிஸ்ட் பதிவாளர் மாரியப்பனை தனியாக சந்தித்து பேசி வருகிறார் என்று புகார் சொல்லுகிறார்கள். அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யார் அந்த பெண் ஊழியர் என்று நாம் விசாரணையில் இறங்கினோம். ஏற்கனவே இந்த அலுவலகத்தில் பணியாற்றி தற்போது ரெட்டில்ஸ் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பணி மாறுதல் ஆகி இருக்கும் ஒரு ஊழியரின் மனைவி தான் இங்கே டைப்பிஸ்ட் அலுவலகம் வைத்துக்கொண்டு பல முக்கிய வில்லங்கமான ஆவணங்களை பர்சன்டேஜ் மூலம் பணம் பெற்றுக் கொண்டு தன் கையில் மாரியப்பனை வைத்திருப்பதாக சொல்லி கல்லா கட்டி வருகிறார் என்கிறார்கள் சில புரோக்கர்கள். அந்தப் பெண் கொண்டு வந்து கொடுக்கும் பத்திரங்களை எந்தவித ஆவணங்களையும் பார்க்காமல் மாரியப்பன் பல் இளித்துக்கொண்டு பத்திரத்தை பதிவு செய்வாராம் நேர்மையின் சிகரம் என்று சொல்லிக் கொள்ளும் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் மாரியப்பனுக்கு வேப்பிலை அடித்து மந்திரம் செய்ய வேண்டும் என்கின்றனர் அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள்.
அம்பத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து ஒன்றை வருட காலத்தில் பதிவாளர் மாரியப்பன் சம்பாதித்த சொத்து மதிப்பு சுமார் 16 கோடியே 56 லட்சம் ரூபாய் இருக்கும் என்கிறார்கள்புரோக்கர்கள். நீதிபதி சுப்பிரமணியம் அளித்த உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தங்களுடைய சொத்து மதிப்பை ஆண்டுதோறும் தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும் என்கிற உத்தரவை இதுவரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் யாரும் பின்பற்றுவதில்லை. எனவே நீதிமன்றம் தானாக முன்வந்து லஞ்சத்தை ஊக்குவிக்கும் அதிகாரிகளின் கைகளை கட்டும் வகையில் நீதிபதி சுப்ரமணியம் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.