புளியந்தோப்பு KP Park கட்டிடங்களை ஆய்வு செய்த CUBE IIT தனது ஆய்வறிக்கை (Summary) வெளியிட்டுள்ளது.
அதில் பூச்சுவேலை செய்ய 1 மூட்டை சிமெண்ட்க்கு 5 மூட்டை மணல் சேர்ப்பதற்கு பதிலாக 15 மூட்டை மணல் கலந்து பூச்சுவேலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கையை படித்த பிறகும் இது வரை PST நிறுவனம் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
உடனடியாக PST நிறுவனம் Blacklist செய்யப்பட்டு, இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு (FIR) பதிவு செய்யப்பட வேண்டும்.
மேலும் இந்த கட்டிட டெண்டரில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் உடனடியாக Suspend செய்யப்பட வேண்டும்.
இந்த மோசமான கட்டுமான பணிகளை கண்காணிக்க தவறி, மக்கள் உயிருக்கு ஆபத்தும் அரசுக்கு இழப்பும் ஏற்படுத்திய உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் அன்பரசன் PST நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.