மணல் திருடும் முன்னாள் அமைச்சர் வீரமணி ஆதரவாளர்கள்.

June 26, 2021

By இரா. தேவேந்திரன்.

திருப்பத்தூர் அருகே முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி பெயரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் திருப்பதி என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணியின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.

இவர் முன்னாள் அமைச்சர் வீரமணி பெயரை தனது லாரியில் எழுதி வைத்துக் கொண்டு அதிமுக பிரமுகர் என மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளை நடை பெற்று வருவதாக எஸ்.பி. சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது .

அதனைத்தொடர்ந்து மணல் கடத்தல் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் திருப்பதி உள்ளிட்ட 2 பேரை கைது செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பதி நான் யார் தெரியுமா?வீரமணியின் வலது கரம் என்று சவுண்டு போட்டு பேசினாராம் அவர்கள் மீது எஸ்.பி. கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாராம்.

Share:

இரா. தேவேந்திரன்.

June 26, 2021

Leave a Comment