chennireporters.com

ஆட்டோ மோதி ஜார்கண்டில் நீதிபதி கொலை சுப்ரீம் கோர்ட் கண்டனம்.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது அவர் மீது ஆட்டோ மோத விட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதியாக உத்தம் ஆனந்த் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் நேற்று காலை ஐந்து மணியளவில் ரந்தீர் வர்மா சவுக் என்ற இடத்தில் நடைபயிற்சி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவர் பின்னால் வந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்று மோதியது அதில் தூக்கி வீசப்பட்ட உத்தம் ஆனந்த் சாலையில் அடிபட்டு கீழே விழுந்தார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த உத்தம் ஆனந்த்தை அருகில் இருந்த ஷாஹித் நிர்மல் மக்தோ மருத்துவமனைக்கு பொதுமக்கள் அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நீதிபதி உயிரிழந்தது தொடர்பாக சர்தார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிபதி விபத்துக்குள்ளான இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது திட்டமிட்டு ஆட்டோவை மோத விட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது அதுதவிர டெல்லி பார் கவுன்சில் நிர்வாகிகள் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!