Chennai Reporters

போலீசாரின் மனித உரிமை மீறலையும் அராஜகத்தையும் தோலுரித்து காட்டுகிறது சூரியாவின் ஜெய் பீம்.

ஜெய் பீம் படத்தில் வரும் காட்சி ஒன்றில் திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு சென்ற பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் மாயமானது.

குறித்த விசாரணை கமிஷனுக்கு தலைமை வகிக்கும் போலீஸ் அதிகாரியை பழங்குடியின ஆண்கள் சிலர் சந்திக்கிறார்கள்.

போலீசாருக்கு வணக்கம் வைத்தாதல் தான் ஒரு முறை கைது செய்யப்பட்டதாக ஒருவர் கூறுகிறார்.

போலீசாருக்கு பயந்து ஒதுங்கிப் போனதால் தான் கைது செய்யப்பட்டதாக மற்றொருவர் கூறுகிறார்.

போலீசார் தன்னை அசிங்கப்படுத்தியதால் தான் செய்யாத தவறை செய்ததாக தன் கணவன் ஒப்புக் கொண்டது பற்றி பெண் ஒருவர் அழுதார்.

தன் தந்தை கிடைக்காததால் போலீசார் தன்னை பிடித்துச் சென்றதாக ஒரு பையன் கூறுகிறார்.இந்த காட்சி ஜெய்பீம் படத்தின் முதல் காட்சியை பிரதிபளிக்கிறது.

முதல் காட்சியில் சிறையில் இருந்து சிலர் வெளியே வருகிறார்கள்.சிறை வாசலில் நிற்கும் காவல் ஒருவர் ஒவ்வொருவரின் சாதியை கேட்கிறார்.

Lijomol Jose, K. Manikandan in Jai Bhim Movie HD Images

( இன்றைக்கும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் போதும் ரிமாண்ட் செய்யும் போதும் என்ன சாதி என்று இப்போதும் போலீசார் கேட்கும் வழக்கம் இருக்கிறது.)

அதில் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களை மட்டும் ஓரமாக நிற்கச் சொல்லிவிட்டு மற்றவர்களை செல்லுமாறு கூறுகிறார்.

சிறையில் இருந்து வெளியே வந்த பழங்குடியினத்தவர்களை நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சேர்க்க போலீசார் வாகனங்களுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்குகள் அதிகமாகவும், ஆட்கள் குறைவாகவும் இருப்பதாக போலீஸ்காரர் ஒருவர் கூறுகிறார்.

அதற்கு மற்றொருவரோ, ஒருத்தன் மீது ஒரு கேஸ் தான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன, தலைக்கு இரண்டு கேஸ போடுங்க என்கிறார்.

இது போன்ற காட்சிகளால் அதிகாரத்தில் இருப்பவர்கள் பாவப்பட்ட மக்களை எப்படி கொடுமைப்படுத்துகிறார்கள்என்பதை ஜெய்பீம் அழகாக காட்டுகிறது.

போலீசாரின் அட்டூழியத்தையும் சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் செய்யும் மனித உரிமை மீறல்களை தெளிவாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ராஜாகண்ணு(மணிகண்டன்), செங்கனி(லிஜோமோல் ஜோஸ்) தம்பதி விழுப்புரம் அருகே இருக்கும் கோணமலையில் வசிக்கிறார்கள்.

இருளர் இனத்தை சேர்ந்த அவர்கள் வறுமையிலும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

அவர்களின் மகள் அல்லி பள்ளிக்கு செல்கிறார், செங்கனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

ஆனால் ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் ராஜாகண்ணுவை தேடிவரும்போது அவர்கள் குடும்பத்தின் சந்தோஷம் எல்லாம் நாசமாகிவிடுகிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!