மதுரை வாடிப்பட்டி அருகே இளம் பெண்ணை கடத்தி கற்பழித்தவனை கைது செய்யாமல் இருக்க காசு வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் குறித்து டிஜிபிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மதுரையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;
நான் மதுரை வள்ளுவர் காலனி பழைய நத்தம் ரோடு பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி எனது மகள் நீண்ட நேரமாக செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தால் இதனை பார்த்த நான் சந்தேகம் அடைந்து செல்போனை வாங்கி பார்த்து அவளை அடித்து கண்டித்து கேட்டேன். அப்போது மதுரை வாடிப்பட்டி அருகிலுள்ள ஐயங்கோட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உடன் பேசிது தெரிய வந்தது.
இந்த நிலையில் என் மகள் விஜயகுமாருக்கு செல்போன் மூலம் நான் திட்டியது தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சிறிது நேரம் கழித்து விஜயகுமார் என் வீட்டு அருகே வந்து என் மகளை கடத்தி சென்று உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் என் மகள் காணாமல் போனது குறித்து பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மதுரை தல்லாகுளம் டிஒன் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இளம்பெண்ணை கற்பழித்த விஜயகுமார்.
அதன் பிறகு விஜயகுமார் தன் மகளை கடத்தி சென்று இருக்கலாம் என்று நான் சொன்னதின் பேரில் விஜயகுமாரிடம் போலீசார் விசாரணை செய்து என் மகளை அழைத்து வந்தனர். பிறகு அவளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். அப்போது அந்த ஆய்வில் என் மகள் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.
பின்பு எனது மகளை காப்பகத்திற்கு காவல் நிலையத்திலிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர். ஜூலை 23ஆம் தேதி அன்றைய மதுரை சமூக நல குழந்தைகள் நலத்துறைக்கு கவுன்சிலிங் காவலர் சித்ரா எனது மகளை அழைத்து வந்தார். கவுன்சிலிங்கிற்கு பின் எனது மகள் என்னிடம் வந்து விஜயகுமார் என்னை கட்டாயப்படுத்தி ச*** வைத்துக் கொண்டார். நான் வேண்டாம் என்று சொல்லியும் என்னை வற்புறுத்தினார். இவ்வாறு ச*** வைத்தால்தான் உனது அம்மா என்னை உனக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் என்று என் மூளையை சலவை செய்து என்னை கற்பழித்தார்.


மேலும் 18 வயதாக இரண்டு மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் எனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று விஜயகுமாரின் உறவினர்கள் அனைவரும் இளம் பெண்ணே மூளையை சலவை செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு எனது மகள் தன்னுடைய தவறை உணர்ந்து அவள் கைப்பட ஒரு புகார் மனுவை எழுதி என்னிடம் கொடுத்தால் அந்தப் புகார் மனுவை நான் காவல் நிலையத்தில் அளித்தேன்.


இதற்கிடையில் நான் காவல் நிலையம் சென்று எனது மகளின் வழக்கு எந்த நிலையில் உள்ளது என்று விசாரித்தேன். அப்போது காவலர் முத்துலட்சுமி என்பவர் என்னை மிகவும் தகாத வார்த்தைகளை சொல்லி என் மனதை புண்படுத்தினார். உனது மகள் சம்மதித்துதான் அவன் ச*** வச்சுகிட்டான். அவனை ஒன்னும் பண்ண முடியாது. உன்மேல்தான் தவறு பெண் பிள்ளையை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று என்னை ஒருமையில் அவமானப்படுத்தும் வகையில் பேசினார். உன்மேல்தான் தவறு உன் பிள்ளையை நீ ஒழுங்காக வளர்க்கவில்லை என்று என்னை அவமானப்படுத்தும் நோக்கில் பேசினார்.
விஜயகுமார் எனது மகளை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஒரு மாதம் மட்டுமே ஆகிறது. நான் வீட்டில் இல்லாத சமயத்தில் அதை சாதகமாக்கி கொண்டு அவளை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதற்கு காவல் நிலையத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளியை சுதந்திரமாக வெளியில் விட்டுள்ளனர். எனக்கு யாருடைய உதவியும் இன்றி ஆதரவு இல்லாமல் நிற்கும் எனக்கு தாங்கள் பாதுகாப்பு அளித்து எனக்கு நீதியைப் பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று புகாரில் கூறியுள்ளார்.


இதுகுறித்து தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கீதா பூபாலன் அவர்களை தொடர்பு கொண்டு இந்த வழக்கு தொடர்பாக கேட்டோம். அதற்கு அவர் இரண்டு தரப்பினரும் விருப்பப்பட்டு சென்றதால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. வழக்கு பதிவு செய்திருக்கிறோம். அந்த வழக்கு போக்சோ வழக்காக மாற்றப்பட்டு அதில் குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்திருக்கிறோம். கடத்திச் சென்று இளம்பெண்ணை கற்பழித்தவரை ஏன் நீங்கள் அவரை கைது செய்யவில்லை என்று கேட்டதற்கு அவர் எதுவும் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.தமிழக காவல் துறையில் வசதி உள்ளவர்களுக்காக ஒரு சட்டமும், ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டமும் இருப்பது நன்றாக தெரிகிறது. கடத்தி கற்பழித்த இளம் பெண்ணிற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படாமல் கற்பழித்தவனை கைது செய்யாமல் இருக்க அவரிடம் காசு வாங்கிக்கொண்டு அவரை சுதந்திரமாக நடமாட விட்டு இருக்கிறது மதுரை மகளிர் காவல் நிலைய போலீசார். உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா ராஜேஸ்வரி.
